‘ஸ்கூல் வேன் பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்து..’ 20க்கும் அதிகமான குழந்தைகள் காயம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jul 24, 2019 03:59 PM

திண்டுக்கலில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று கவிழ்ந்து 20க்கும் அதிகமான குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

20 children injured in school van accident near Dindigul

திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடியில் உள்ளது புனித சூசையப்பர் பள்ளி. இங்கு படிக்கும் குழந்தைகளை அழைத்துச் செல்ல தனியார் வேன் ஒன்றைப் பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். வழக்கம்போல இன்று காலை குழந்தைகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட வேன் எதிர்பாராத விதமாக பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

வேன் மோளப்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் பாண்டி குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக வேனை பக்கவாட்டில் திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 20க்கும் அதிகமான குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல் தாலூகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமடைந்த குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags : #SCHOOLVAN #ACCIDENT