'ஆறுமாத தம்பதியரை'.. 'ஆத்திரத்தில்' துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற இளைஞர்'.. இறுதியில் நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 17, 2019 11:56 AM

மும்பையில், இளைஞர் ஒருவர் சகோதரியையும் சகோதரியின் கணவரையும் சுட்டுக்கொல்ல முயன்று, அந்த முயற்சி தோல்வி அடைந்ததால், தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

man tries to kill 6-month-old couple in a tragic incident

மும்பை கண்டிவாலியில் உள்ள சாம்தா நகரில், படுகேஸ்வரர் திரிலோக்நாத் திவாரி என்னும் 34 வயது இளைஞர், தனது சகோதரி, உத்தரப்பிரதேசத்தில் இருந்து சென்று ரோஹித் சிங் என்பவரை 6 மாதத்துக்கு முன்பாக திருமணம் செய்துகொண்டதை விரும்பாமல் அதிருப்தி அடைந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் தன் வீட்டுக்கு வந்த சகோதரியையும், சகோதரியின் கணவரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத்தள்ள முயற்சித்துள்ளார் திவாரி. ஆனால் அவர்கள் இருவரும் எஸ்கேப் ஆகி ஓடிவிட்டனர்.

தனது துப்பாக்கிக் குண்டுகளுக்கு சகோதரியையும் சகோதரியின் கணவரையும் இரையாக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், திவாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்ததோடு, அவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்று விசாரித்து வருகின்றனர்.

Tags : #UTTAR PRADESH #SISTER #BROTHER