“700 இளம் பெண்களின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து புகைப்படங்களை திருடி”.. +2 படித்த 20 வயது இளைஞன் செய்த நடுங்கவைக்கும் காரியம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத் மாநிலத்தில் உள்ள பாவ்நகர் மாவட்டத்தில் மஹுவா என்ற கிராமத்தை சேர்ந்தவர் 20 வயதான அல்பாஸ் ஜமானி.

12ஆம் வகுப்பு படித்த இவர், அங்குள்ள ஆலை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி, இளம் பெண்களின் கணக்குகளில் உலாவி, அவர்களுள் தான் தேர்ந்தெடுக்கும் இளம் பெண்களின் புகைப்படங்களை அவர்களின் கணக்குகளில் இருந்து தொடர்ச்சியாக திருடி வந்துள்ளார்.
பின்னர் அந்த புகைப்படங்களை மார்ஃபிங் செய்து, நிர்வாண புகைப்படங்களாகவே அவற்றை மாற்றி அந்த புகைப்படங்களை பல பெண்களுக்கும் அனுப்பி, “இதுபோன்ற வலுவான உடலினை பெற தன்னை தொடர்பு கொள்ளுங்கள்” என்று கூறி வந்துள்ளார். இப்படி பல பெண்களிடம் செய்த ஏமாற்று வேலையால் சிக்கிய இவர், தற்போது கைது செய்யப்பட்டார். இவரிடம் காவல்துறையினர் நடத்தி விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.
அதன்படி இவ்வாறு இவர் 700க்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்துள்ளார் என்பதும், தொடர்ச்சியாக இளம் பெண்களின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை திருடி நிர்வாணமாக்கி அவற்றை பகிர்ந்து, அதன் மூலம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்
