‘உலகக் கோப்பை தொடரே கடைசியாக இருக்கும்..’ வெளியான செய்தியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 03, 2019 04:30 PM

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கும் கடைசி போட்டியோடு தோனி ஓய்வு பெறவுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

India\'s last World Cup match likely to be MS Dhoni\'s last

இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 223 ரன்கள் எடுத்த போதிலும் அவருடைய ஆட்டம் சிறப்பாக இல்லை எனத் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார். சச்சின்  உட்பட பலரும் தொடர்ந்து தோனியின் ஆட்டத்தை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தோனி உலகக் கோப்பை தொடரோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்துப் பேசியுள்ள பிசிசிஐ அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர், “தோனி இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு தொடர்ந்து இந்திய அணிக்காக விளையடுவதற்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 3 வகையான போட்டிகளிலும் கேப்டன் பதவியைத் திடீரென உதறியவர் தோனி. அதனால் அவர் எந்த நேரத்தில் எந்த முடிவை எடுப்பார் என யாருக்கும் தெரியாது” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கும் கடைசி போட்டியோடு தோனி ஓய்வு பெறவுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தோனி தரப்பிலிருந்தோ, பிசிசிஐ தரப்பிலிருந்தோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வராத நிலையில் பிடிஐ நிறுவனம் தோனி ஓய்வு குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #MSDHONI #DHONIATCWC19 #DHONIRETIREMENT