புதரில் மறைந்து போட்டோ எடுக்கும் புகைப்பட நிபுணர்கள்... 'டயானாவைப்' போல் 'ஹாரியைத்' துரத்தும் ஊடகங்கள்...
முகப்பு > செய்திகள் > உலகம்தங்களை மறைந்திருந்து போட்டோ எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு ஹாரி எச்சரிக்கை விடுத்தள்ளார்.

இங்கிலாந்தின் இளவரசராக இருsந்த ஹாரியும், அவர் மனைவி மேகனும் அரச கடமைகளில் இருந்து விலகுவதாகவும், தங்களது நேரத்தை வடஅமெரிக்கா மற்றும் கனடாவில் பிரித்து செலவிட போவதாகவும் அறிவிப்பை வெளியிட்டனர்.
இதையடுத்து இருவரும் கனடாவின் வான்கூவர் தீவில் உள்ள விக்டோரியா சொகுசு இல்லத்தில் குடியேறியுள்ளனர். இந்தச் சூழலில், தங்களை பின்தொடர்ந்து வந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு ஹாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹாரி தொடர்பான புதிய புகைப்படங்கள் இங்கிலாந்து பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன. அவை அனைத்தும் புதரில் மறைந்திருந்து எடுக்கப்பட்டதாக ஹாரியின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆவேசம் அடைந்துள்ள ஹாரி, தங்களை பின்தொடர்ந்து வந்தால், சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
