‘சென்னையில மட்டும் இல்ல.. ஜெய்ப்பூரிலும் கிங்குதான்’.. ‘தோனி.. தோனி..’ காதைக் கிழித்த ரசிகர்களின் ஆரவாரம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Apr 10, 2019 05:49 PM

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, அனைத்து மேட்ச்களுமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

IPL2019-Jaipur People welcomes msdhoni in airport video goes viral

கடைசியாக சென்னை சேப்பாக்கத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை நோக்கி முன்னேற்றம் அடைந்தது. 

இதனையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான அடுத்த போட்டி நாளை (ஏப்ரல் 11) ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நிகழவுள்ளதை அடுத்து, இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக தல தோனி மற்றும் அணி வீரர்கள் அனைவரும் விமானம் மூலம் ஜெய்ப்பூரை அடைந்தனர்.

இதனிடையே ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து வெளிவந்து ஜெய்ப்பூர் மண்ணில் கால் வைத்த தோனியின் காதுகளில் அதிரும் அளவுக்கு  தோனி.. தோனி.. என்று ரசிகர்கள் ஆரவாரமாக கத்திய வீடியோவினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளது.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும், தல தோனி சென்னையில் மட்டுமல்ல, ராஜஸ்தானிலும் கிங்தான் என்று கமெண்டுகள் பதிவிட்டு, தோனி மீதான தங்களது தீரா பிரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ வைரலாகி வருவதோடு பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

Tags : #IPL #IPL2019 #CSK #MSDHONI #RAJASTHAN #VIRALVIDEOS