‘வெச்சு செஞ்சுட்டாங்கண்ணா.. சிஎஸ்கேதான் மாஸ்’.. ஆர்சிபி அணி ரசிகரின் வைரல் காரியம்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Mar 24, 2019 02:57 PM

ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புகளோடு, 2019-ஆம் ஆண்டு ஐபிஎல்  சீசனின் தொடக்க ஆட்டமாக சென்னை சூப்பர் கின்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான போட்டி முதல் போட்டியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை நடந்தது.

RCB fan\'s viral reaction after RCB loses in first home match with CSK

ஆனால் நடந்த சோகமோ, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிகவும் பரிதாபமாக தோற்றுள்ளது அந்த அணியின் ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம்தான் என்றாலும் கொஞ்சம் கெத்தாகவாவது தோற்றிருக்கலாம் என்பதுதான் அந்த அணி ரசிகர்களின் ஒருமித்த குரலாக உள்ளது.

ஆர்சிபி அணியில் பர்தீவ் படேலைத் தவிர்த்து அனைவரும் சிங்கிள் டிஜிட்டைத் தாண்டாத ரன்களையே ஸ்கோர் செய்துள்ளனர். வெற்றி இலக்கே 71 ரன்தான் என்றாலும், 18வது ஓவர் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அதனை அடைய முயற்சித்துக்கொண்டிருந்தது. ஹெட்மயர் ரன் அவுட் ஆனபோதே ஆர்.சி.பியின் தோல்வி உறுதியாகிவிட்டது. ஆனாலும் மேட்ச் முடியும்வரை காத்திருக்க வேண்டியிருந்ததால், பிட்ச் சற்று மோசமாக இருப்பதாக கோலி, தோனி இருவருமே அதிருப்தி தெரிவித்தனர்.

ஆனாலும் கோலி, ஏபிடிவில்லியர்ஸ் விக்கெட்டுகளை ஹர்பஜன் பிடித்துவிடவும், மற்றவர்களின் விக்கெட்டுகளை ஜடேஜா, தீபக் சாஹர் உள்ளிட்டோர் பிடித்துவிடவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி எளிதாக சாத்தியமானது. மேட்ச் முடிந்ததுதான் தாமதம், ஹோம் கிரவுண்டில் சிஎஸ்கே வெற்றி பெற்றதும், ஆர்.சி.பி மீதான ட்ரோல்கள் வெளிவரத் தொடங்கின. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தீவிர ரசிகர் ஒருவர் வெக்ஸ் ஆகி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், ‘வெச்சு செஞ்சுட்டாங்கணா... தரமான சம்பவம் இது.  சென்னைதான் மாஸ்.. சிஎஸ்கே தான் மாஸ்.. ஜெர்சியை (ஆர்.சி.பி) கழட்டிடலாம்ணா’ என்று சொல்லி ஆர்சிபி ஜெர்ஸியை கழட்டுகிறார். உள்ளே இந்தியா என்றிருந்த வேறொரு ஜெர்ஸியை அணிந்துள்ளார். அதனால், ‘இந்திய நாடு எங்க நாடு. இந்தியா பேன்ஸ் நாங்க’ என்று கூறியபடி செல்கிறார். இணையத்தில் இந்த வீடியோவும் அந்த ரசிகரின் சுய அணி விமர்சனும் சக்கை போடு போட்டு வருகிறது.

Tags : #IPL2019 #IPL #CSK #RCB #VIRALVIDEOS #TROLL