'ஏன் இப்படி?’.. தட் ‘எப்பவுமே கூலா இருக்க மாட்டேன்’ மொமண்ட்.. பொறுமை இழந்த ‘தல’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Apr 07, 2019 02:11 PM
தோனி என்றாலே கூல் கேப்டன் என்ற பெயர்தான் பொருத்தமாக இருந்துவருகிறது. அவர் அவ்வளவு சீக்கிரம் தன் நிலையை இழந்து நடந்துகொள்வதை பார்ப்பது என்பது மைதானத்தில் மிக அரிதான காரியம்தான்.

சமீபத்தில் அவர் கிரவுண்டில் சக வீரர்களுடனும், சிறுவர்களுடனும், ரசிகர்களுடனும் துரத்திப் பிடித்து விளையாண்ட அத்தனை தருணங்களும் இந்த ஐபிஎல் சீசனில் தோனியின் மீது அளவளாவிய பிரியத்தை அவரது ரசிகர்கள் வைப்பதற்கான காரணங்களை வலுப்படுத்தின.
அத்தகைய தோனி பொறுமையை இழந்து தீபக் சாஹரிடம் சூடாகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதிய போது, முதலில் பேட்டின் செய்த சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 160 ரன்களை எடுத்தது. எனவே 161 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற சூழலில் ஆடி வந்தது.
அப்போது அந்த ஓவருக்கான பந்தினை தீபக் சாஹர் வீசினார். ஆனால் முதல் பந்தே தீபக்கின் கையில் இருந்து நழுவி, ஃபுல் டாஸ் சென்று பேட்ஸ்மேனிடமிருந்து விலகி பவுண்டரியைத் தொட்டது. இதனால் 1 ரன் உட்பட பவுண்டரியையும் சேர்த்து பஞ்சாப் அணி 5 ரன்கள் எடுத்தது. அடுத்த பந்தும் நோ பால் ஆகி, 2 ரன்கள் பஞ்சாப் அணிக்கு கிடைத்தது.
ஆனால் ரன்களை கட்டுப்படுத்தினால்தான் பஞ்சாப் அணிக்கு வெற்றிவாய்ப்பை அளிக்காமல், சென்னை அணி வெற்றிபெற முடியும் என்கிற தோனியின் வியூகம் தீபக்கினால் சிதையத் தொடங்கியதும், தோனி நிதானத்தை இழந்து, ஆவேசமாக வந்து, ‘ஏன் இப்படி’ என்கிற தொனியில் தீபக்கிடம் கேட்க, தீபக்கும் அதற்கு விளக்கம் அளிக்கிறார். பின்னர் தோனியின் அறிவுரைப்படி பந்து வீசியதால், 22 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வென்றது.
MS Dhoni schooling Deepak Chahar for his back to back no balls #CSKvKXIP #IPL2019 pic.twitter.com/iRhGQ62gib
— Deepak Raj Verma (@DeVeDeTr) April 6, 2019
