‘தாயைப் போல பிள்ளை’.. பேட்டை பந்தாடும் பிரபலத்தின் மகள்.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Apr 23, 2019 02:35 PM
விம்பிள்டன் டென்னிஸ் என்றாலே செரினா வில்லியம்ஸ்தான். அமெரிக்காவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸை விரும்பாத டென்னிஸ் ரசிகர்களே இருக்க முடியாது.

இந்த நிலையில் செரினா வில்லியம்ஸ் தனது குட்டி மகள் அலெக்ஸிஸ் ஒலிம்பியா செய்துள்ள அச்சு அசலான சேட்டைகளை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குட்டி செரினா செய்யும் சேட்டை என்ன தெரியுமா?
வீட்டின் ஒவ்வொரு அறைக்குள்ளேயும் சென்று செரினாவின் முக்கியமான அடையாளமாக திகழும் டென்னிஸ் ராக்கெட் பேட்டுகளை எடுத்து வந்து ஹாலில் வைக்கிறார், போடுகிறார், தூக்கி தரையில் அடிக்கிறார் குட்டி செரினாவான அலெக்ஸிஸ் ஒலிம்பியா. இதைத்தான் செரினா வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ஒரு வரலாரு தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவுக்கு செரினாவின் கணவர் அலெக்ஸிஸ் ஓஹானியன், ‘அத விடு..இந்த டென்னிஸ் ராக்கெட்ட அடிச்சு நொறுக்குமா’ என்று அலெக்ஸில் ஒலிம்பியாவை ஊக்கப்படுத்துகிறார். ரசிர்கள் பலரும், ‘அடுத்த டென்னிஸ் ஸ்டார், எதிர்கால கிராண்ட் ஸ்லாம் சாம்பியன்’ என்றெல்லாம் கமெண்ட் கொடுத்துள்ளனர். அதிலும் ஒருவர், ‘விதிப்படி, ராக்கெட்டை தரையில் அடிப்பது தவறு, இதற்கு 2 வார்னிங் கொடுத்தாச்சு’ என்று செல்லமாக நக்கலடித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
