'டைமுக்கு எக்ஸாம் ஹாலுக்கு போயிடனும்’.. குதிரையில் பறந்த பள்ளி மாணவி.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | Apr 08, 2019 04:37 PM

கேரளாவில் 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் புல்லட்டில் பறப்பது போல் குதிரைசவாரி செய்து பரீட்ச்சை ஹாலுக்கு சென்றுள்ள வீடியோ இணையத்தில் உலக லெவல் ஹிட் அடித்துள்ளது.

kerala girl student riding horse to reach examhall on time viral video

கேரளாவில் திரிசூர் அருகே, 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், தேர்வுக்கு நேரமாகிவிட்டதால், குதிரை வேகத்தில் சென்றாலொழிய தேர்வுக்கு நேரத்திற்கு செல்ல முடியாது என்பதை உணர்ந்து, குதிரையிலேயே தேர்வு ஹாலுக்குச் சென்றுள்ள சம்பவம் வீடியோவாக பதிவாகியுள்ளது.

எந்த பிசிறும் இல்லாமல் பக்காவான ஹார்ஸ் ரைடிங் கற்றுத் தேர்ந்த ஒருவராலேயே சரிவேகத்தில் முறையான ஸ்பீடில் சவுகரியமான ஒரு ஹார்ஸ் ரைடிங்கைச் செய்ய முடியும் என்பதற்கு சான்றாக அந்த மாணவி ஸ்கூல் யூனிஃபார்முடனும், ஸ்கூல் பையை முதுகில் சுமந்தபடியும் குதிரையில் சென்றதை அதன் வேகத்திலேயே பைக்கில் சென்ற இருவரில் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

பலரும் இம்மாணவியை பாராட்டியதோடு, பெண்களின் அசாத்திய திறமையை போற்றினர். அத்துடன் மஹிந்திரா நிறுவனத்தின் நிறுவனரான ஆனந்த் மஹிந்திரா, இந்த பள்ளி மாணவியை பாராட்டியதோடு, ‘எனது ஹீரோவாகவே மாறிவிட்ட இந்த மாணவி மற்றும் மாணவியின் குதிரை இருவரும் நிற்கும் புகைப்படம் இருந்தால் யாரேனும் கொடுங்கள், எனது ஸ்க்ரீன் சேவராக வைத்துக்கொள்கிறேன்’ என்று ட்வீட்டும் செய்துள்ளார்.

Tags : #KERALA #SCHOOLSTUDENT #HORSERIDING #VIRALVIDEOS #BRILLIANTGIRL