சுஷ்மாவின் ஆளுமை.. அமைச்சரின் பணிவு.. சுவாரஸ்யமான நிகழ்வு.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 26, 2019 05:32 PM

மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வித்யாசமான முறையில் ஆசீர்வாதம் வழங்கியுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Sushma Swaraj Blesses Minister Nitin Gadkari in this way goes viral

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாஜகவின் மூத்த பெண் தலைவர்களுள் முக்கியமானவர். ஏறத்தாழ 9 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் உடல்நிலை சரியான முறையில் ஒத்துழைப்பு தாராததால், கடந்த முறை நிகழ்ந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

இதனை கட்சியும், சுஷ்மா ஸ்வராஜூம் ஒருசேர முடிவு செய்து அறிவித்திருந்தனர். இந்நிலையில் டெல்லியில் நடந்த பாஜக-வினர் கலந்துகொண்ட தேர்தல் கூட்டத்துக்கு வருகை தந்த சுஷ்மா காரில் இருந்து இறங்கி வந்ததும், அவரிடம் அருகே நடந்து வந்த நிதின் கட்காரி அவரிடம் மரியாதையாகவும் பணிவுடனும் ஆசி கோருகிறார்.

நிதின் கட்காரியை விட 6 வயது மூத்தவரான சுஷ்மா ஸ்வராஜூம் நிதின் கட்காரியின் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்ததோடு, அவரின் முதுகில் தடவிக்கொடுத்து தன் ஆசீர்வாதத்தை வழங்கினார்.  அந்த ஆசீர்வாதத்தில் தன்னையே மறந்து, சுஷ்மாவின் பேரன்பு பெருமழையில் நனைந்த பெருமிதத்துடன் நிதின் கட்காரி செல்கிறார்.

இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவுக்கு பிறகு பாஜகவுக்கென்று தனித்துவமான கலாச்சாரம் இருப்பதாகக் கூறி பாஜக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : #BJP #EXTERNAL AFFAIRS MINISTER #UNION MINISTER #NITIN GADKARI #SUSHMA SWARAJ #VIRALVIDEOS