‘ஏம்ப்பா இப்படியாப்பா பண்ணுவீங்க’.. திருமண போட்டோ ஷூட்டில் நடந்த ‘வைரல்’ மொமண்ட்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 19, 2019 04:25 PM

திருமணம் என்பதை வெறும் சடங்கு நிகழ்வாக பார்ப்பவர்கள் மத்தியில், திருமணத்தை மறக்க முடியாத தருணங்கள் ஒன்று சேர்ந்து அமைந்த வைபோகமாக பார்ப்பவர்களும் உண்டு.

hilarious kerala couple falls from boat hilarious photo shoot viral

அந்த அழகான தருணத்தை பதிவு செய்யும் தற்கால வழிகளுள் முக்கியமானதாக இருக்கும் ஒன்றுதான் போட்டோ ஷூட். திருமண  புகைப்பட ஷூட்டினையே தற்போது கிரியேட்டிவாக யோசித்து, பலவிதமான லொகேஷன்களிலும், சூழல்களிலும், மணமக்களுக்கென பிரத்யேக காஸ்டியூம்களைக் கொண்டு எடுப்பதுண்டு.

போட்டோ ஆல்பத்தினை பிரிண்ட் செய்துகொள்ளும் நோக்கில் மட்டுமே எடுக்காமல், வீடியோக்களாகவும் அவை எடுக்கப்படுகின்றன. இதற்கென கலை நயத்தோடு, ஷூட் செய்யும் இடத்தை வடிவமைத்து இன்றைய இளைஞர்கள் புதிது புதாக ஃபோட்டோ ஷூட்களை எடுத்து தருகின்றனர. இன்றைய தம்பதிகளும் இவற்றையே விரும்புகின்றனர்.

அவ்வகையில், கேரளாவைச் சேர்ந்த டிஜின் மற்றும் ஷில்பா தம்பதியர் பம்பை நதியில், போட் ஒன்றில் செல்வதுபோல் போட்டோஷூட் எடுத்துள்ளனர். ஆனால் அப்போது தம்பதியருக்கே தெரியாமல், போட்டோ ஷூட் எடுக்கும் போட்ட்கிராபர்கள், திட்டமிட்டு போட்டை அசைத்து, தம்பதியர்கள் இருவரும் எதிர்பாராத விதமாக நதியில் விழுவதுபோல் சூழலை உண்டாக்கி போட்டோ ஷூட் எடுத்துள்ளனர்.

வீடியோவாகவும் பதிவாகியுள்ள இந்த காட்சிகள் அனைத்து தளங்களிலும் வைரலாகி வருகின்றன. கேரளாவின் வெட்பிளானர் வெட்டிங் ஸ்டுடியோஸ் புகைப்படக் காரர்கள் எடுத்த இந்த போட்டோ ஷூட் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. இதுபற்றி பேசிய இந்த ஸ்டுடியோவின் உரிமையாளர், சில சமயம் இப்படி சர்ப்ரைஸாக தம்பதியருக்கே தெரியாமல் போட்டோஷூட் செய்யும்போது அழகான தருணங்கள் வாய்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags : #KERALA #VIRALVIDEOS #WEDDING #PHOTOSHOOT