‘இதான் கூல் கேப்டன்’.. ஐபிஎல்-லின் வைரல் ட்வீட்.. நெகிழ்ந்த பாட்டி.. உருக்கமான வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Apr 04, 2019 02:13 PM
இந்திய கிரிக்கெட் உலகின் முக்கியமான லீக் போட்டியான ஐபிஎல் அணிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அனைவராலும் தல என்று கொண்டாடப்படும் மகேந்திர சிங் தோனி விளையாடி வருகிறார்.

நேற்றைய தினம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியினை அதிரடியாக ஆடி, 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை அணியை வீழ்த்தி வெற்றி கொண்டது. எனினும் சென்னை அணியின் இந்த தோல்வி, பெரும் முயற்சிக்கு பிறகு கிடைத்ததால், ரசிகர்களின் பேராதரவு நீடித்தபடியே இருக்கிறது.
பாண்ட்யா சகோதரர்களின் பலே ஆட்டத்தினால் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவர்களில் கிடுகிடுவென வெற்றிவாய்ப்பினை நோக்கி நகர்ந்தது. இந்நிலையில் இந்த மேட்சிலும் தல தோனியின் ஆட்டத்தை பலரும் பாராட்டினர். இந்த போட்டி நிகழ்ந்த மைதானமான வான்கடே மைதானத்தில் மும்பையைச் சேர்ந்த சென்னை அணி ஆதரவாளரான வயதான பாட்டி ஒருவர் தன் பேத்தியுடன் இந்த போட்டியைக் காண வந்திருந்தார்.
‘நான் தோனிக்காக மட்டுமே இங்கு இருக்கிறேன்’ என்று எழுதப்பட்ட ஒரு பதாகையுடன் மைதானத்தில் காத்துக்கொண்டிருந்த அந்த பாட்டியை, தோனி சென்று சந்தித்தபோது அந்த பாட்டி, தோனியின் கைகளை பற்றிக்கொண்டு நெகிழந்து பேசியதும், பின்னர் தோனியுடன் சேர்ந்து அந்த பாட்டி செல்ஃபி ஒன்றினை எடுத்துக்கொண்டதும் வைரலாகியது. இந்த நெகிழ்வான நிகழ்வினை ஐபிஎல் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு, கூல் கேப்டனின் பணிவு இதுதான் என்று குறிப்பிட்டுள்ளது.
Captain cool, @msdhoni humble 😊
— IndianPremierLeague (@IPL) April 4, 2019
Heartwarming to see this gesture from the legend in Mumbai 🤗 @ChennaiIPL #VIVOIPL pic.twitter.com/6llHlenIzL
