‘ப்ளீஸ் என் மேலதான் தப்பு’.. மணமகனின் காலில் விழுந்து கெஞ்சும் முன்னாள் காதலி.. மணமகளின் முடிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Apr 10, 2019 03:38 PM

முன்னாள் காதல் என்பதை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து முடித்துக்கட்டிவிட்டு பலரும் புதிய திருமணத்துக்கு தயாராவதுண்டு. அப்போதும் கூட பழைய காதலர் திருமணத்துக்கு வந்துவிடுவாரோ என்கிற அச்சம் பலருக்கும் இருக்கும்.

groom\'s ex girlfriend wearing bridal gown & enters in his wedding

அதே அச்சம் இருந்திருக்க வேண்டும் இந்த புதுமாப்பிள்ளைக்கு. முன்னாள் காதலியுடனான கருத்துவேறுபாட்டுக்கு பின்னர், ஒரு தீர்க்கமான முடிவெடுத்த இந்த சீன மாப்பிள்ளை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதென முடிவு செய்துள்ளார். அந்த முடிவினை வெற்றிகரமாக செயல்படுத்தவும் செய்திருக்கிறார்.

இந்த திருமண விழாவில் திருமணத்துக்கே உண்டான பாரம்பரிய ஆடையணிந்து அழகாக போஸ் கொடுத்துக்கொண்டிருந்துள்ளார். அவரின் அருகில் புது மணமகள் நின்றுகொண்டிருக்கிறார். அப்போதுதான் மாப்பிள்ளையின் முன்னாள் காதலி, மணக்கோலத்தில் வந்ததோடு, மாப்பிள்ளையின் கையைப் பிடித்திழுத்து, காலில் விழுந்து கதறி ‘என் மீதுதான் தவறு’ என்று கெஞ்சுகிறார். தன்னையே திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறார்.

ஆனாலும் அவரை உதறித் தள்ளிவிட்டு, அவரது கையை தட்டிவிடுகிறார் மணமகன். இதைப்பார்த்துக்கொண்டிருந்த மணமகள் பொறுமையிழந்து அங்கிருந்து கோபமாக வெளியேறுகிறார். அவரைப் பார்த்த மணமகனும் தான் காலடியில் கிடந்த முன்னாள் காதலியை புறக்கணித்துவிட்டு, மணமகளை சமாதானப்படுத்த ஓடுகிறார். உருக்கமான இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.

Tags : #CHINA #LOVE #BRIDE #GROOM #VIRALVIDEOS #WEDDING