‘யாரு சாமி இவரு’.. ‘சும்மா போட்டிபோட்டு கேட்ச் பிடிப்பாங்க போல’ வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 13, 2019 04:36 PM

தென் ஆப்பிரிக்காவுக்கு  எதிரான  2 -வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மற்றும் சஹா கேட்ச் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

WATCH: Virat Kohli and Saha took brilliant catches

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2 -வது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 254 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 108 ரன்களும், ஆல்ரவுண்டர் ஜடேஜா 91 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. இப்போட்டியின் அதிகபட்சமாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், முகமது ஷமி 2 மற்றும் ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் அன்ரிச் நார்ட்ஜேவின் விக்கெட்டை விராட் கோலியும், தியூனிஸ் டி ப்ரூயின் விக்கெட்டை விக்கெட் கீப்பர் சஹாவும் அடுத்தடுத்து கேட்ச் பிடித்து அவுட்டாக்கி அசத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #VIRATKOHLI #BCCI #ICC #INDVSA #TEAMINDIA #SAHA #CATCH #TEST