VIDEO: 'செவரு' ஸ்ட்ராங்கா இருக்கா?.. 'பெயிண்ட்' மேட்ச் ஆகுதான்னு பாத்தேன்!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Manjula | Nov 13, 2019 05:05 PM
சில சமயங்களில் பறவைகள், விலங்குகள் செய்யும் செயல்கள் செம வைரலாகி விடும். அதிலும் அவை ஸ்மார்ட்டாக நடிக்கும் பட்சத்தில் அது இன்னும் செமையாக இருக்கும்.

அது போல ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சற்று உயரத்தில் இருக்கும் கிளியை பார்க்கும் பூனை அதை பிடிப்பதற்கு அடிமேல் அடி எடுத்து வைத்து, மெதுவாக பிடிக்க பார்க்கிறது.
“I’m just checking the wall.” 😅 pic.twitter.com/Tal3zIfgN7
— Buitengebieden (@buitengebieden_) November 12, 2019
சடாரென கிளி திரும்பி பார்க்க சட்டென பூனை தன்னுடைய முகபாவனைகளை மாற்றிக்கொண்டு, நட்பு பாராட்டும் வகையில் அருகில் இருக்கும் சுவரினை செக் செய்வது போல நடிக்கிறது. ஆனால் பூனையின் நடிப்பை கிளி நம்பவில்லை.
இந்த வீடியோ பார்த்தவர்கள் அனைவரும் பூனையின் திடீர் நடிப்பை வெகுவாக பாராட்டியும், கிண்டலடித்தும் வருகின்றனர். எல்லா கிளிகளும் பூனையிடம் சிக்குவதில்லை!
Tags : #VIDEO
