'மேடம் உங்க செல்போன் இதுவான்னு பாருங்க’.. ஆச்சர்யப்பட வைத்த திமிங்கலம்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | May 09, 2019 06:20 PM

கடலில் விழுந்த தனது ஸ்மார்ட்போனை திமிங்கலம் ஒன்று கண்டுபிடித்துத் தந்துள்ள வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Watch: whale fished out womens cellphone after dropped into Sea

நார்வே பகுதியைச் சேர்ந்த இனா மன்சிகா, சில வாரங்களுக்கு முன்பு ஹமர்ஃபெஸ்ட் பகுதிக்குச் சென்றுள்ளார். ஆனால் அப்போது அவரது செல்போன் கடலில் தவறி விழுந்துள்ளது. கடலில் தவறி விழுந்த செல்போன் இனி நமக்கு கிடைக்கப் போவதில்லை. ஆனால் அதில் பல முக்கியமான ஃபைல்கள் இருக்கிறதே என்ற சோகத்திலேயே படகில் அவரும் அவரது நண்பரும் சவாரி செய்துள்ளனர்.

ஆனால் அவர்கள் எதிர்பராத வண்ணம், சர்ப்ரைஸாக கடலின் ஆழத்தில் இருந்து மேலே வந்த அந்த பெலுகா வகை திமிங்கலம் ஒரு செல்லப் பிராணியைப் போல, இனா மான்ஸிகா தவறவிட்ட அந்த செல்போனை அந்த திமிங்கலம் தனது வாயில் ஏந்தியபடி வந்து, இனாவின் நண்பரது கைகளில் தந்துள்ளது.

வீடியோவாக பதிவு செய்யப்பட்ட இந்த நெகிழ்வான சம்பவம் இன்ஸ்டாகிராம் போஸ்டாக வைரலாகி வருகிறது. மனிதர்களைக் காட்டிலும் தன்மையுடன் இந்த திமிங்கலம் நடந்துகொண்டதால், நெகிழ்ச்சியில் அந்த திமிங்கலத்தின் அடித்தாடையை இனா வருடிக் கொடுக்கிறார். பின்னர் அது மீண்டும் கடலுக்குள் சென்றுள்ளது.

Tags : #BELUGA #WHALE #VIDEOVIRAL #INSTAGRAM