'ஏம்மா அது கிட்ட போய் இதெல்லாம் ட்ரை பண்லாமா ?' பதறுதுல்ல.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 09, 2019 05:18 PM

உயிரோடு இருக்கும் ஆக்டோபஸை சாப்பிட முயன்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் இணையத்தில் வீடியோவாக வலம்வருகிறது.

chinese blogger tries to eat a live octopus on camera viral video

கடல்வாழ் உயிரினங்களுடன் பழகுவதும், விளையாடுவதும் அவற்றை சாப்பிடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ள ஒரு சீன பெண் சீ சைடு கேர்ள் லிட்டில் செவன் என்கிற இணையத்தில் இவற்றை எல்லாம் அவ்வப்போது புகைப்படமாகவும் வீடியோவாகவும் பதிவிடுவது உண்டு.

இதனாலேயே இந்த பெண்ணுக்கு நிறைய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில், இணையத்தில் இன்னும் ஹிட் அடிக்க வேண்டும் என்று, ஒரு விநோதமான காரியத்தைச் செய்ய நினைத்துள்ளார் அந்த பெண்.  அதன்படி, உயிரோடு இருக்கும் ஆக்டோபஸ் ஒன்றை சாப்பிட்டு அதை லைவ் புரோகிராமாக ஒளிபரப்ப நினைத்துள்ளார்.

இதற்கென உயிருடன் நன்றாக வாலை ஆட்டிக்கொண்டு விறைப்பாக இருந்த ஒரு ஆக்டோபஸை கையில் எடுத்துக்கொண்டு, அதன் வாலாட்டும் பகுதிகளை எல்லாம் கெட்டியாக பிடித்துக்கொண்டு சாப்பிட முயல்கிறார். ஆனால் சற்றும் எதிராபாராத வகையில், அந்த ஆக்டோபஸ் அந்த பெண்ணின் கன்னத்தையும் சதையையும் சேர்த்து கவ்வியுள்ளது.

வலி தாங்காமல் கதறிய அந்த பெண், பெரும் போராட்டத்துக்குப் பிறகு ஆக்டோபஸை தன் முகத்தில் இருந்து பின்னோக்கி பிடித்து இழுக்கிறார். அவரது கன்னத்தில் ரத்தம் வடிகிறது. அழுதுகொண்டே தனது காயத்தைக் காண்பித்த அந்த பெண், மீண்டும் ‘அடுத்த முறை கட்டாயமாக இந்த ஆக்டோபஸை சாப்பிடுவேன். அதை வீடியோவில் செய்வேன்’ என்று கூறுகிறார்.

Tags : #FOOD #CHINESE #BLOGGER #VIDEOVIRAL