‘49 குழந்தைகளுக்கு தனது உயிரணுவை கொடுத்த மோசடி டாக்டர்’.. ஆனால் நடந்ததோ இதுதான்!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Apr 14, 2019 01:24 PM

தன்னுடைய உயிரணுவைத் தந்து 49 குழந்தைகளுக்கு நெதர்லாந்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தந்தையாகியுள்ள சம்பவம் பெரும் சலனத்தை உண்டுபன்ணியுள்ளது.

doctor gives birth to 49 babies illegally here is what happened

ரோட்டர்டாம் என்னும் பகுதி நெதர்லாந்தில் உள்ளது. இங்கு கருத்தரிப்பு மருத்துவமனையை நடத்தி வந்த மருத்துவர், ஜான் கார்பத்தின் மருத்துவமனைக்கு செயற்கை கருத்தருப்புக்காக பெண்கள் பலர் வந்துபோவது வாடிக்கையாக இருந்துவந்தது. ஆனால் குறிப்பிட்ட உயிரணுவுடன் இங்கு செயற்கை கருத்தரிப்புக்கு வரும் பெண்களின் உயிரணுக்களைத் தவிர்த்துவிட்டு, இந்த மருத்துவர் ஜான், தன்னுடைய உயிரணுக்களையே பயன்படுத்தி வந்துள்ளார்.

இவரிடம் ஏமார்ந்த பெண்கள் பலரும் 1980கள் முதலே இவரிடம் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகளை செய்துகொண்டு சென்றவர்கள். ஆனால் வரும்பொழுது உயிரணுக்களுடன் வந்த பெண்கள் பலரும் ஜான், அவற்றை செலுத்தாமல், அவரின் உயிரணுவை தங்கள் கருப்பைக்குள் செலுத்தியுள்ளார் என்பதை தத்தம் குழந்தைகள் வளரும்பொழுது முகஜாடையை வைத்து சந்தேகமடைந்து கண்டுபிடித்துள்ளனர்.

அதன் பின்னர், அந்த பெண்கள் தொடர்ந்த வழக்கில், ஜான் விசாரிக்கப்பட்டு டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதுதான், அவரது டிஎன்ஏ-வுடன் அந்த பெண்களுக்கு பிறந்த குழந்தைகளின் டிஎன்ஏக்கள் ஒத்துப் போனதால், இன்று வளர்ந்து திருமண வயதை அடைந்திருக்கும் 49 குழந்தைகள் அவருக்கு பிறந்தவர்கள் என்பது நிரூபணமாகியுள்ளது. ஆனால் இதில் கொடுமை என்னவென்றால், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்த உண்மைகள் வெளிவந்திருந்தாலும், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜான் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துவிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #BIZARRE #VIRALNEWS