‘பிறந்த வருஷத்த மாத்தினா கணக்கு முடங்கிடும்’.. ட்விட்டர் எச்சரிக்கை.. ஏன்?

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Siva Sankar | Mar 27, 2019 07:13 PM

டெஸ்க்டாப் திரையில் வால்பேப்பர் தொடங்கி, மொபைல் போனில் ஸ்க்ரீன் சேவர், சமூக வலைப்பக்கங்களில் கவர் படங்கள் என நாளும் விதவிதமான தீம்களை மாற்றி பயன்படுத்துவதே புத்துணர்ச்சியாக நம்மை வைப்பதற்கு உதவும் என பலரும் கருதுகின்றனர்.

if user changed birth year to 2007 twitter will get blocked, Why

ஆனால் ட்விட்டரில் அவ்வாறு தீம்களை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு பலரும் இன்னொரு வழிமுறையைக் கையாளுகின்றனர். எனினும் அவ்வாறுச் செய்தால், பயனாளரின் ட்விட்டர் கணக்கே முடக்கப்படலாம் என்று ட்விட்டர் எச்சரிக்கை செய்துள்ள சம்பவம் இணையதளத்தை அதிர வைத்துள்ளது. ட்விட்டரின் நிறம், வடிவம் உள்ளிட்ட தீம்களை மாற்றிக்கொள்ள எண்ணினால் பிறந்த வருடத்தை 2007 என மாற்றுமாறு ட்விட்டரில் வலம் வந்த வதந்திகளை நம்பி பிறந்த வருடத்தை மாற்றிய பலரது கணக்குகளும் முடக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதுபற்றி விளக்கம் கொடுத்துள்ள ட்விட்டர், இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் அவ்வாறு செய்தால், குறிப்பிட்ட ட்விட்டர்வாசி சிறுவராக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அவரது கணக்கு முடக்கிவிடப்படும் என்றும், இது எவராலோ உருவாக்கப்பட்டுள்ள சூழ்ச்சி என்றும் இதில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

இவற்றையும் மீறி ஒருவேளை ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருந்தால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட எதேனும் ஒரு அடையால அட்டையில் இருக்கும் பிறந்த தேதியைக் காண்பித்து, ட்விட்டர் சப்போர்ட் உதவியுடன் இழந்த கணக்கை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியும் என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.

Tags : #TWITTER #VIRALNEWS #SOCIALMEDIA