‘நாம பிரிஞ்சடலாம்’.. தற்கொலைக்கு முன் காதலன் அனுப்பிய வீடியோ.. காதலியின் விபரீத முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 11, 2019 05:33 PM

சென்னை ராயபுரத்தில் உள்ள பனைமரத்தொட்டியை சேர்ந்த பிரேம்நாத், காசிமேடு பகுதியை சேர்ந்த பவித்ராவை காதலித்து வந்துள்ளார். மிக அண்மையில் பிளஸ் டூ தேர்வு எழுதியவர் பவித்ரா. ஒரு கட்டத்தில் இருவருக்குமான கருத்து வேறுபாட்டினால் காதல் ஊசலாட தொடங்கியது. அதனால் சில நாட்கள் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இப்படி ஒரு சூழலில் அதிக மன அழுத்தத்தில் இருந்த பிரேம்நாத் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தன் வீட்டிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

WhatsApp video and audio has a role in chennai lovers suicide

தனது காதலர் இறந்த துக்கத்தில் மனவருத்தம் தாளாமல் இருந்த பவித்ரா, பிரேம்நாத் இறந்த அடுத்த நாளே இரவு 9 மணி அளவில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து உயிருக்குப் போராடும் நிலையில் இருந்தபோது, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சென்னை ராயபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த காதல் ஜோடிகளின் அடுத்தடுத்த தற்கொலைகள் பற்றிய போலீஸாரின் விசாரணையில் இருவீட்டார் தரப்பினரும் யாரும் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இல்லை என்றும் இவர்கள் இருவரும் இருந்ததால் பெற்றோர்கள் மனம் வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது.

இதனை இன்னும் ஆழமாக போலீசார் விசாரித்தபோதுதான் பிரேம்நாத் இறப்பதற்கு முன்பாக பவித்ராவுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோவும் அதனுடன் ஒரு ஆடியோவும் அனுப்பியது தெரிய வந்தது. அந்த ஆடியோவில் நீ என்னை உண்மையாக காதலிக்கிறாயா என்று சந்தேகத்தின் அடிப்படையில் பிரேம்நாத் கேள்வி எழுப்பியதாகவும் நாம் இனி இருவரும் இனி பிரிந்து விடுவோம் என்று அவர் கூறியதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.‌ தான் தூக்கு போட்டு இறப்பதற்கு முன்பாக, தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதை பிரேம்நாத் வீடியோவாகவும் அனுப்பியுள்ளார். இதனையெல்லாம் பார்த்த பவித்ரா, அந்த ஆடியோவையும் கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். 

உடனடியாக பிரேம்நாத்துக்கு பவித்ரா, போன் செய்தபோது பிரேம்நாத்தின் செல்போன் சுவிட்ச்ஆப்பில் இருந்ததால் பவித்ரா பயந்து பிரேம்நாத்தின் தற்கொலை முடிவு, தன்னால்தான் என நினைத்துக்கொண்டோ அல்லது பிரேம்நாத்தின் தற்கொலையால் தான் கேள்விக்குள்ளாக்கப்படலாம் என்று பயந்தோ மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் இது பற்றி ஆழமான விசாரணை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #WHATSAPP #SAD #LOVE #BIZARRE #CHENNAI