BGM Shortfilms 2019

‘கோலி க்ரவுண்ட்ல அடிக்கடி ஏன் இப்டி பண்றீங்க.?’.. ‘அதுக்கு ஒரு காரணம் இருக்கு’.. வைரலாகும் விராட் கோலி சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 13, 2019 12:53 PM

மைதானத்தில் அடிக்கடி நடனமாடுவது குறித்து விராட் கோலி சஹால் டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Whenever I hear any music I feel like dancing, Says Virat Kohli

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையேயான 2 -வது ஒருநாள் போட்டி க்யூன் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 120 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 71 ரன்களும் எடுத்தனர்.

இப்போட்டியில் விராட் கோலி பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியான்தத்தின் 26 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஜாவேத் மியான்தத் (1930) முதல் இடத்தில் நீடித்து வந்தார். இப்போட்டியில் விராட் கோலி (1931) 19 ரன்களை கடந்த போது ஜாவேத்தின் சாதனையை முறியடித்தார்.

போட்டி முடிந்தபின் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால் தனது சஹால் டிவிக்காக விராட் கோலியிடம் பேட்டி எடுத்தார். அப்போது மைதானத்தில் நடனமாடுவது குறித்து விராட் கோலியிடம் சஹால் கேள்வி எழுப்பினார். அதற்கு , ‘எனக்கு டான்ஸ் ஆட ரொம்ப பிடிக்கும். ஆனால் பெரிதாக ஆட தெரியாது. இருந்தாலும் இசையை எப்போதெல்லாம் கேட்கிறேனோ அப்போது எனக்கு டான்ஸ் தானாகவே வந்துவிடுகிறது’ என கோலி தெரிவித்துள்ளார்.

Tags : #VIRATKOHLI #BCCI #TEAMINDIA #INDVWI #ODI #CRICKET #CHAHAL #DANCE