“என்ன பாத்தா எப்படி தெரியுது…” எரிமலையாய் வெடித்த ராதிகா… கோபிக்கு checkmate

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Radhika never seen angry over Gopi Bhagyalakshmi serial

Also Read | “கமல் சாரோட ஆக்ஷன் அவதார்… wait பண்ண முடியல…” விக்ரம் பத்தி கார்த்தியின் Viral Tweet

பாக்கியலட்சுமி…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற தொடர்களில் ஒன்று. இந்த தொடர் இதுவரை 400 க்கும் மேற்பட்ட எபிசோட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த தொடரில் சுசித்ரா, சதிஷ்குமார், திவ்யா சுரேஷ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

Radhika never seen angry over Gopi Bhagyalakshmi serial

சிக்காத கோபி…

இந்த சீரியல் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தன்னுடைய மனைவி பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்த கோபி, பாக்கியாவின் தோழியான ராதிகாவுடன் மறை உறவில் இருந்து வருகிறார். இது இருவருக்கும் தெரியாமல் மறைத்து வருகிறார். ஆனால் எந்த நேரமும் கோபி- ராதிகா விவகாரம் அவரது குடும்பத்துக்கு தெரிந்து மாட்டிக் கொள்வதற்கான சூழல்கள் வந்தாலும், எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் கோபி எப்படியாவது தப்பித்து சென்று கொண்டிருக்கிறார்.

Radhika never seen angry over Gopi Bhagyalakshmi serial

பலநாள் திருடன்…

ஒருகட்டத்தில் ராதிகாவிற்கு கோபி மீது சந்தேகம் உருவாக, நிச்சயமாக அவரின் குடும்பத்தை பார்த்தே ஆக வேண்டும் என முடிவெடுக்கிறார். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், குடித்து விட்டு ராதிகா வீட்டிற்கு வரும் கோபி, மனைவி என்று கூறி, பாக்கியாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ராதிகாவிடம் காண்பிக்கிறார். இதனைக் கண்டதும், கண்ணீர் விட்டு கதறும் ராதிகா, தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறார்.  இதேபோல போதையில் வீட்டுக்கு செல்லும் கோபி அங்கும் உளறி மாட்டிக்கொள்கிறார். இப்படி ஒரே நேரத்தில் இரண்டு பேரிடமும் கோபி மாட்டிக்கொண்டதால் அடுத்தௌ என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Radhika never seen angry over Gopi Bhagyalakshmi serial

எரிமலையாய் வெடித்த ராதிகா…

இந்நிலையில் மீண்டும் வீட்டுக்கு வந்து குழந்தையைக் கொஞ்சிக்கொண்டிருக்கும் கோபியை ராதிகா கோபத்தின் உச்சிக்கே சென்று வார்த்தைகளால் வறுத்தெடுக்கிறார். இது சம்மந்தமான ப்ரோமோவில் “என்ன பாத்தா எப்படியா உனக்கு தெரியுது. நான் என்ன தனியா வாழ தெரியாம இருக்கேனா… இல்ல யாராவது கெடச்சா போதும் கூட சேர்ந்து வாழலாம்னு இருக்கனா… என்ன பத்தி நீ கேவலமா நெனச்சிட்டு இருக்கல்ல… எவ்ளோ நம்புனன் உன்ன… எல்லாமே பொய்… டீச்சர் என் ப்ரண்ட்டுன்னு தெரிஞ்சும் கூட, அவங்க ஹ்ஸ்பண்ட் நீங்கதாங்குறத மறச்சுட்டு என்கூட பழகுறீங்கல்ல” என தொடர் கேள்விகளால் துளைக்க, கோபி வாயடைத்து போய் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் முழிக்கிறார். இது சம்மந்தமான ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

 

Also Read | “ஆரம்பிக்கலாங்களா”… லோகேஷின் Tweet-க்கு ‘கைதி’ தயாரிப்பாளர் SR பிரபுவின் ரியாக்ஷன்

தொடர்புடைய இணைப்புகள்

Radhika never seen angry over Gopi Bhagyalakshmi serial

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Vijay Television will find this news story useful.