அட்லி - ஷாருக்கான் இணையும் இந்தி படத்துக்கு இசையமைப்பாளர் இவரா? அப்போ சம்பவம் உறுதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி - ஷாருக்கான் இணையும் புதிய படத்தில் பிரபல தமிழ் இசையமைப்பாளர் இணைந்துள்ளார்.

Anirudh Joined as Music Director for Atlee Shahrukh Khan movie JAWAN

Also Read | அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் - நயன்தாரா நடிக்கும் புதிய படம்.. ரிலீஸ் எப்போ? மாஸ் அப்டேட்

அட்லி (Atlee) இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இப்படத்திற்கு 'ஜவான்' 'Jawan' என பெயரிடப்பட்டுள்ளது. தலையில் பலத்த காயத்துடன், முகச்சிதைவுக்கு உள்ளாகி ஷாருக்கான் காட்சியளிப்பது போன்றும், கையில் துப்பாகியை எடுத்து அலைபேசியில் பேசுவது போன்றும், ரயில் முன் நின்று இருக்கும் காட்சியும் டீசரில் இடம் பெற்றுள்ளன.

Anirudh Joined as Music Director for Atlee Shahrukh Khan movie JAWAN

இந்த படம் பான் இந்திய படமாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.  இந்த படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கி, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷாருக்கானுக்கு (Shah Rukh Khan) ஜோடியாக நயன்தாரா (Nayanthara) நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Anirudh Joined as Music Director for Atlee Shahrukh Khan movie JAWAN

நடிகை பிரியாமணி (Priyamani) ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இது குறித்து அனிருத் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதில், "கனவுகள் நனவாகும்! பாலிவுட் பாட்ஷாவுக்கு இசையமைக்கிறேன். ஷாருக்கானுக்கு நன்றி மற்றும் என் சகோதரன் அட்லியை நினைத்து பெருமைப்படுகிறேன். மேலும் இந்த படம் எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்" என அனிருத் டிவிட்டரில் கூறியுள்ளார்.

Anirudh Joined as Music Director for Atlee Shahrukh Khan movie JAWAN

இதன் மூலம் அட்லி - அனிருத் கூட்டணி முதல்முறையாக ஜவான் படத்திற்காக இணைந்துள்ளது.

Also Read | அப்படி போடு.. அட்லி- ஷாருக்கான் இணையும் புதிய இந்தி படத்தலைப்பு இது தானா? சூப்பர் தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Anirudh Joined as Music Director for Atlee Shahrukh Khan movie JAWAN

People looking for online information on Atlee, Atlee Hindi Movie, Jawan, Music director anirudh, Shahrukh Khan, Shahrukh Khan Jawan Movie Release Updates will find this news story useful.