“கமல் சாரோட ஆக்ஷன் அவதார்… wait பண்ண முடியல…” விக்ரம் பத்தி கார்த்தியின் Viral Tweet

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லோகேஷ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Actor karthi viral tweet about vikram movie

Also Read | ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் நடிக்கும் ’சுழல்’… பிரபல ஓடிடி வெளியிட்ட ரிலீஸ் Update

விக்ரம்

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு  ‘விக்ரம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். வெளியானதில் இருந்து ரசிகர்களின் பாராட்டுகளையும் நேர்மறையான விமர்சனங்களையும் குவித்து வருகிறது.

லோகேஷின் அறிக்கை

முன்னதாக இயக்குனர் லோகேஷ் “என் சின்ன வயதிலிருந்தே "உலக நாயகன்" ரசிகனாகவே இருந்திருக்கிறேன். இன்றைக்கு அவரது படத்தை இயக்கியிருக்கிறேன், இன்னமும் இது ஒரு கனவைப் போலிருக்கிறது. என் அன்பான ரசிகர்களுக்கு, இன்னும் சில மணி நேரங்களில் விக்ரம் திரைப்படம் முழுக்க உங்கள் சொந்தமாகிவிடும். அது உங்களை மகிழ்வித்து, மறக்கமுடியாத மகத்தான திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்! "கைதி"யை இன்னொருமுறை மறுபார்வை பார்த்துவிட்டு "விக்ரம்" அழைத்துச் செல்லும் உலகுக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். என்றும் அன்புடன், லோகேஷ் கனகராஜ்” எனக் கூறியது ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.

Actor karthi viral tweet about vikram movie

கைதி விக்ரம் connection

இந்நிலையில் தற்போது படம் வெளியாகிவிட்ட நிலையில் கைதி படத்துக்கும் விக்ரம் திரைப்படத்துக்கும் பல தொடர்புகள் இருப்பதாகவும், கைதியில் இருந்த சில பாத்திரங்கள் இந்த படத்திலும் இடம்பெற்றிருப்பதாகவும், அது சம்மந்தமான காட்சிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், படம் பார்த்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். படத்தில் ஒரு இடத்தில் கைதி டில்லியின் குரல் இடம்பெற்றுள்ளது. இதுதவிர நடிகர் சூர்யாவின் கடைசி நேர சிறப்புத் தோற்றமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. படத்தில் கைதி 2 படத்துக்கான சில முன்னோட்டங்களும் கொடுக்கப்பட்டுள்ளதாக சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Actor karthi viral tweet about vikram movie

கார்த்தி டிவீட்…

இந்நிலையில் கைதி பட நாயகன் கார்த்தி விக்ரம் படத்தைப் பற்றி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “கமல் சாரை ஆக்ஷன் அவதாரில் பார்க்க காத்திருக்க முடியவில்லை. படத்தை பற்றி நிறைய நல்ல விஷயங்கள் கேள்விப்படுகிறேன். லோகேஷ் மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். கார்த்தியின் இந்த டிவீட் இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

Actor karthi viral tweet about vikram movie

Also Read |“ஆரம்பிக்கலாங்களா”… லோகேஷின் Tweet-க்கு ‘கைதி’ தயாரிப்பாளர் SR பிரபுவின் ரியாக்ஷன்

தொடர்புடைய இணைப்புகள்

Actor karthi viral tweet about vikram movie

People looking for online information on Karthi, Karthi tweet about vikram movie, Vikram FDFS, Vikram Movie will find this news story useful.