"தலைவர் கூட மூணாவது படம்.." Behindwoods விருது நிகழ்வில்.. Thalaivar169 பற்றி பேசிய அனிருத்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8 ஆவது Behindwoods Gold Medals விருது நிகழ்ச்சி, மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

Anirudh about Thalaivar169 in Bgm awards 2022

Also Read | ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் நடிக்கும் ’சுழல்’… பிரபல ஓடிடி வெளியிட்ட ரிலீஸ் Update

இந்த இரண்டு நாட்களிலும், Behindwoods விருது நிகழ்ச்சியில், வெற்றிமாறன், செல்வராகவன், வெங்கட் பிரபு, எஸ் ஜே சூர்யா, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், நெல்சன், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, ஜோனிதா காந்தி, , சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன், அற்புதம் அம்மாள், சீமான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Behindwoods கோல்டு மெடல்ஸ் விருது நிகழ்ச்சி தொடர்பாக, தற்போது "Behindwoods TV" யூ டியூப் சேனலில் அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதுவரை, லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், அனிருத், பிரியங்கா மோகன், கீர்த்தி ஷெட்டி, சன்னி லியோன், அற்புதம் அம்மாள், ஜோனிதா காந்தி உள்ளிட்டோர் விருது வென்றிருந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தது.

Red Carpet-ல் அனிருத்

இந்நிலையில், இசை அமைப்பாளர் அனிருத் Behindwoods விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, Red Carpet-ல் பகிர்ந்த பல சுவாரஸ்ய தகவல் தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அப்போது பேசிய அனிருத், தனது இசை பயணம் குறித்தும், புதிய இயக்குனர்களுடன் பணிபுரிவதும் குறித்தும் பேசி இருந்தார்.

Anirudh about Thalaivar169 in Bgm awards 2022

"Thalaivar169"

தொடர்ந்து, ஜாலியோ ஜிம்கானா பாடலில், நடனமாடி இருந்தது பற்றி பேசிய அனிருத், "அது முதலில் ஒரு Promotional பாடல் போல தான் திட்டமிடப்பட்டது. மேலும், விஜய் சாருடன் நடனமாடும் வாய்ப்பும் கிடைத்தது" என்றார். தொடர்ந்து, நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கவுள்ள "Thalaivar169" குறித்து பேசிய அனிருத், "இன்னும் ஒரு சில மாதங்களில், Thalaivar169 ஷூட்டிங் ஆரம்பம் ஆகும் என நான் நினைக்கிறேன். அது  ஒரு ஸ்பெஷலான படமாக இருக்கும் என்றும் நினைக்கிறேன். தலைவர் படத்திற்கு மூன்றாவது முறையாக இசையமைக்க உள்ளது, மிகவும் உற்சாகமாக உள்ளது" என தெரிவித்தார்.

Anirudh about Thalaivar169 in Bgm awards 2022

அதே போல, நடிகை பிரியங்கா மோகனுடன் இணைந்து, டான் படத்தில் வரும் 'Private Party' என்ற பாடலுக்கும் நடனமாடி இருந்தார் அனிருத். ஏற்கனவே, அனிருத் விருது வாங்கி இருந்த வீடியோக்கள், அதிகம் ட்ரெண்டிங் ஆகி இருந்ததை அடுத்து, அனிருத்தின் Red Carpet வீடியோவும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | அட்லி - ஷாருக்கான் இணையும் இந்தி படத்துக்கு இசையமைப்பாளர் இவரா? அப்போ சம்பவம் உறுதி!

"தலைவர் கூட மூணாவது படம்.." BEHINDWOODS விருது நிகழ்வில்.. THALAIVAR169 பற்றி பேசிய அனிருத் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Anirudh about Thalaivar169 in Bgm awards 2022

People looking for online information on Anirudh, Bgm awards 2022, Thalaivar169 will find this news story useful.