"இந்தா பாத்துக்க".. போனை காட்டிய கோபி.. அதிர்ந்த ராதிகா.. பரபரப்பில் பாக்கியலட்சுமி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரின் மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்க போகும் காட்சி ஒன்று வெளியாகி, அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

baakiyalakshmi radhika shattered after gopi truth

மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்ற பாக்கியலட்சுமி தொடரில், கோபி கதாபாத்திரம் தான் தற்போது ஹைலைட்டான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மனைவி பாக்கியாவை ஏமாற்றி விட்டு, ராதிகாவை திருமணம் செய்ய தயாராக இருக்கிறார் கோபி. ஆனால், நெருங்கிய தோழிகளான ராதிகா மற்றும் பாக்கியா ஆகிய இருவருக்கும் கோபியின் நாடகம் தெரியாமலே இருக்கிறது.

அடுத்தடுத்து அரங்கேறும் ட்விஸ்ட்..

பலமுறை கோபி இருவரிடம் சிக்கிக் கொள்வதறகான வாய்ப்புகள் உருவான போதும், அதிலிருந்து தொடர்ந்து தப்பித்துக் கொண்டே இருந்தார் கோபி. ஆனால், நாட்கள் செல்ல செல்ல, நிச்சயம் கோபி விரைவில் சிக்கி விடுவார் என்ற ஒரு எதிர்பார்ப்பு தான், ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

baakiyalakshmi radhika shattered after gopi truth

பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடரின் மகா சங்கமம் சமீபத்தில் ஒளிபரப்பாகி இருந்தது. இதில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வரும் மூர்த்திக்கு, கோபி மற்றும் ராதிகா இடையே இருக்கும் உறவு குறித்து தெரிய வந்து விடுகிறது. இதுகுறித்து அவர் கோபியிடம் கேட்க, பெரிய பிரச்சனையே உருவாகி விடுகிறது. அப்படி ஒரு  சூழ்நிலையில் தான், கோபி குடும்பத்தை பார்த்தே தீர வேண்டும் என ராதிகா முடிவு எடுக்கிறார்.

தீர்மானமாக இருக்கும் ராதிகா

ஆனால், இதற்கு முதலில் சம்மதம் தெரிவிக்கும் கோபி, ராதிகா கிளம்ப தயாராகும் போது, குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைக்க முடியாது என மறுக்கவும் செய்கிறார். இதனால், வீட்டை விட்டு வெளியேறுமாறு, ராதிகாவும் கோபத்தில் கூற, கோபியும் கிளம்பிச் செல்கிறார். கோபியின் வீட்டில் இருப்பவர்களை பார்த்தே ஆக வேண்டும் என்பதில் தீர்மானமாக ராதிகா இருப்பதால், நிச்சயம் கோபி இந்த முறை தப்பிக்க முடியாது என்று தான் அனைவரும் கருதினர்.

baakiyalakshmi radhika shattered after gopi truth

அப்படி ஒரு சூழலில், வெளியாகியுள்ள காட்சி ஒன்று, ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. ராதிகா வீட்டிற்கு குடித்துக் கொண்டு திரும்ப வரும் கோபியிடம், "ஏன் குடித்து விட்டு இங்கே வந்த நாடகம் ஆடுகிறீர்கள். உங்களின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என கூறினேன். ஆனால், அதை உங்களால் செய்ய முடியவில்லை" என கேட்கிறார்.

என் குடும்பத்த தானே பாக்கணும்..

இதற்கு பதிலளிக்கும் கோபி, "உனக்கு என்ன இப்போ, எனது குடும்பத்தை தானே பார்க்க வேண்டும்" என கூறியபடி, மனைவி பாக்கியாவுடன் இருக்கும் புகைப்படத்தை ராதிகா முன்பு காண்பிக்கிறார். தனது நெருங்கிய தோழியுடன் கோபி இருப்பதை பார்த்து, ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தே போகும் ராதிகா, "இது பாக்கியா டீச்சர்'ல" என கூறிக் கொண்டே கண்ணீர் விட்டபடி, நிலைகுலைந்து போகிறார்.

baakiyalakshmi radhika shattered after gopi truth

இது தொடர்பான காட்சிகள், தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதால், அடுத்து எப்படி கதை அமைய போகிறது என்பதை அறிய ஆவலாக உள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

baakiyalakshmi radhika shattered after gopi truth

People looking for online information on Baakiya, Baakiyalakshmi, Baakiyalalshmi Episode, Gopi, Radhika will find this news story useful.