“ஆரம்பிக்கலாங்களா”… லோகேஷின் Tweet-க்கு ‘கைதி’ தயாரிப்பாளர் SR பிரபுவின் ரியாக்ஷன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

S R Prabhu reaction lokesh Tweet about kaithi vikram connection

Also Read | “இனிமே Title-அ ‘கருப்பு கமல்ஹாசன்’னு போடணும்…” ’விக்ரம்’ எப்படி இருக்கு? கூல் சுரேஷின் Viral video

விக்ரம் ரிலீஸ்…

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு  ‘விக்ரம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். வெளியானதில் இருந்து ரசிகர்களின் பாராட்டுகளையும் நேர்மறையான விமர்சனங்களையும் குவித்து வருகிறது.

லோகேஷ் அறிக்கை…

இந்நிலையில் நேற்றிரவு இயக்குனர் லோகேஷ் பகிர்ந்த ஒரு அறிக்கையில் “வணக்கம் நண்பர்களே, இதுவரை பட வெளியீட்டுக்கு முன் நான் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை. நினைவு தெரிந்த நாள் முதல் என் சின்ன வயதிலிருந்தே "உலக நாயகன்" ரசிகனாகவே இருந்திருக்கிறேன். இன்றைக்கு அவரது படத்தை இயக்கியிருக்கிறேன், இன்னமும் இது ஒரு கனவைப் போலிருக்கிறது. இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற எனக்குத் துணை நின்ற நல்லுள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

S R Prabhu reaction lokesh Tweet about kaithi vikram connection

விக்ரம் பட வேலைகளைத் தொடங்கிப் பதினெட்டு மாதங்கள் ஆகின்றன. ரத்தமும் வியர்வையும் சிந்தி (உண்மையாகவும் கூட) ரசிகர்களான உங்களை மகிழ்விக்கவும், ஒரு மனிதரை, நம் நாட்டின் பெருமிதத்தை , "உலக நாயகன்" கமல்ஹாசனைக் கொண்டாடவும் உழைத்திருக்கிறோம். வாய்ப்புக்கு நன்றி சார், இந்தத் திரைப்படம் உங்கள் ரசிகனிடமிருந்து உங்களுக்கான பரிசாக வருகிறது! இதை நான் என்றென்றும் மகிழ்வுடன் நினைவில் சேமித்திருப்பேன்! என் அன்பான ரசிகர்களுக்கு, இன்னும் சில மணி நேரங்களில் விக்ரம் திரைப்படம் முழுக்க உங்கள் சொந்தமாகிவிடும். அது உங்களை மகிழ்வித்து, மறக்கமுடியாத மகத்தான திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்! "கைதி"யை இன்னொருமுறை மறுபார்வை பார்த்துவிட்டு "விக்ரம்" அழைத்துச் செல்லும் உலகுக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். என்றும் அன்புடன், லோகேஷ் கனகராஜ்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.

கைதி- விக்ரம் தொடர்பு…

லோகேஷ் சொன்னது போல கைதி படத்துக்கும் விக்ரம் திரைப்படத்துக்கும் பல தொடர்புகள் இருப்பதாகவும், கைதியில் இருந்த சில பாத்திரங்கள் இந்த படத்திலும் இடம்பெற்றிருப்பதாகவும், அது சம்மந்தமான காட்சிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், படம் பார்த்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். படத்தில் ஒரு இடத்தில் கைதி டில்லியின் குரல் இடம்பெற்றுள்ளது.

S R Prabhu reaction lokesh Tweet about kaithi vikram connection

SR பிரபுவின் டிவீட்…

இந்நிலையில் லோகேஷின் அந்த டிவீட்டை பகிர்ந்துள்ள கைதி படத்தின் தயாரிப்பாளர் S R பிரபு “ #Kaithi2 #aarambikkalaangala” போன்ற ஹேஷ்டேக்குகளைப் பகிர்ந்துள்ளார். அவரது இந்த டிவீட்டால் கைதி 2 விரைவில் உருவாகக் கூடுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. SR பிரபுவின் இந்த டிவீட் தற்போது இணையத்தில் பரவலாக கவனிப்பைப் பெற்று வருகிறது.

S R Prabhu reaction lokesh Tweet about kaithi vikram connection

Also Read | ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் நடிக்கும் ’சுழல்’… பிரபல ஓடிடி வெளியிட்ட ரிலீஸ் Update

தொடர்புடைய இணைப்புகள்

S R Prabhu reaction lokesh Tweet about kaithi vikram connection

People looking for online information on Kaithi movie, Lokesh Tweet, S R Prabhu, Vikram Movie will find this news story useful.