Nenjuku Needhi

"என்ன படக்குன்னு ஓகே சொல்லிட்டாரு" அடம்பிடித்த ராதிகா.. சம்மதித்த கோபி.. "இனி என்ன ஆகுமோ?"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர், தற்போது மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கிறது.

baakiyalakshmi serial radhika wants to see gopi family

Also Read | தங்கர் பச்சான் இயக்கத்தில் பாரதிராஜா, கௌதம் மேனன் & யோகிபாபு… Title உடன் வெளியான அப்டேட்!

மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்ற பாக்கியலட்சுமி தொடரில், கோபி கதாபாத்திரம் தான் தற்போது ஹைலைட்டான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மனைவி பாக்கியாவை ஏமாற்றி விட்டு, ராதிகாவை திருமணம் செய்வதில் அதிக நாட்டத்துடன் உள்ளார் கோபி. பாக்கியா மற்றும் ராதிகா ஆகிய இருவரும் தோழிகள் என்ற போதும், கோபி செய்து வரும் தில்லாலங்கடி வேலைகள் எதுவும் இருவருக்கும் தெரியாது.

தப்பித்துக் கொண்டே இருக்கும் கோபி

அப்படி தெரிந்து கொள்வதற்கான சூழ்நிலை, பல நேரங்களில் உருவான போதும் அதில் இருந்து எப்படியாவது தப்பித்து கொண்டு இருக்கிறார் கோபி. இந்த தொடரில், தொடர்ந்து ஏகப்பட்ட விறுவிறுப்பும் இருப்பதால் எப்போது கோபி மாட்டிக் கொள்வார் என்பதை அறிந்து கொள்ள தான், ரசிகர்கள் பலரும் தீவிரமாக உள்ளனர். மேலும், சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடரின் மகா சங்கமம் கூட, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்தது.

baakiyalakshmi serial radhika wants to see gopi family

அடம்பிடிக்கும் ராதிகா

அந்த சமயத்தில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வரும் மூர்த்திக்கு, கோபி மற்றும் ராதிகா இடையே இருக்கும் உறவு குறித்து தெரிய வந்துவிடுகிறது. இதுகுறித்து அவர் கோபியிடம் கேட்க, பெரிய பிரச்சனையே உருவாகி விடுகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில் தான், கோபியின் குடும்பத்தை ஒரே ஒரு தடவை பார்க்க வேண்டும் எனக்கூறி அடம்பிடிக்கிறார் ராதிகா.

ஆனால் கோபியோ, தன்னுடைய குடும்பத்தினரை ராதிகாவிற்கு அறிமுகம் செய்து வைக்க மறுக்கவே, அவரை வீட்டிலிருந்து வெளியேற சொல்கிறார் ராதிகா. இதன் காரணமாக, கோபி மற்றும் ராதிகா இடையே பிரச்சனை முதல் முறையாக எழுந்தது. எப்படியாவது கோபியின் வீட்டில் உள்ளவர்களை பார்த்தாக வேண்டும் என்பதில் ராதிகா குறியாக இருப்பதால் நிச்சயம் கோபி இந்த முறையாவது சிக்கி விடுவார் என்றுதான் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

baakiyalakshmi serial radhika wants to see gopi family

அதுக்குள்ளே கோபி பிளான் போட்டுட்டாரோ?..

இந்நிலையில் தான், தற்போது வெளியாகியுள்ள ஒரு காட்சி, மக்கள் மத்தியில் இன்னும் பரபரப்பையும், விறுவிறுப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.

கோபியிடம் தனது ஃபேமிலி போட்டோ இருக்கிறதா என ராதிகா கேட்கிறார். ஆனால், வீட்டில் இருப்பதாக கூறும் கோபி, எனது குடும்பம் பற்றி தான் உனக்கு தெரியுமே என கூறி, போட்டோ இல்லை என்பதை திட்டவட்டமாக கூறி மறுக்கிறார். இறுதியில், கோபி எதை எல்லாமோ சொல்லி சமாளிக்க, கடைசியில் ராதிகா நிச்சயம் உங்கள் குடும்பத்தினரை பார்த்தே ஆகவேண்டும் என கோபியை கட்டாயப்படுத்துகிறார்.

baakiyalakshmi serial radhika wants to see gopi family

நாளைக்கு என்னை நீங்கள் உங்களுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், நிச்சயம் நீங்கள் வந்து என்னை அழைத்துச் செல்கிறீர்கள் என நான் நம்புகிறேன் என்றும் ராதிகா சற்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார். இதற்கு கோபியும் நிச்சயம் நான் உன்னை அழைத்துச் செல்வேன் என உறுதியளிக்கிறார்.

கோபி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி இருப்பதால், வேறு ஏதாவது திட்டத்தை தயார் செய்து விட்டு தான், இதனை செய்கிறார் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | Behindwoods விருது மேடையில் லோகேஷ் கொடுத்த Thalapathy67 அப்டேட்.. கூடவே இன்னொரு சர்ப்ரைஸும் நடந்துச்சு..

தொடர்புடைய இணைப்புகள்

baakiyalakshmi serial radhika wants to see gopi family

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Vijay Television will find this news story useful.