www.garudabazaar.com

"பாக்கியா மெஸ் நடத்துறாங்க, கோபி வெளில மீல்ஸ் சாப்டுறாரு😅" - வெச்சு செஞ்ச KPY டீம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' தொடர், தற்போது டாப் கியரில் போய் கொண்டிருக்கிறது.

KPY new episode about baakiyalakshmi serial spoof

பாக்கியா மற்றும் ராதிகா ஆகியோருக்கு நடுவில், பல தில்லாலங்கடி வேலைகள் செய்து, அதிலிருந்து தொடர்ந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறார் கோபி.

இது ஒரு புறம் இருக்க, பாக்கியா தயார் செய்த உணவினை குழந்தைகள் உண்டு மயங்கி விழுந்த சம்பவம், அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஆஹா, இது அதுல்ல..

இது தொடர்பாக விசாரித்த போலீசார், பாக்கியாவை கைது செய்தும் அழைத்து சென்றிருந்தனர். இதன் பிறகு, தாயை காப்பாற்ற வேண்டி முயற்சியில் இறங்கிய எழில், தாயின் உணவில் எந்த குறைகளையும் இல்லை என்பதை நிரூபித்து, பாக்கியாவை மீட்கும் முயற்சியிலும் இறங்கி விட்டார்.

பாக்கியாவை பார்க்க வேண்டி, ராதிகா அழைத்து செல்ல இருந்ததால், அதில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டி, கோபி தான் இப்படி பண்ணி இருப்பார் என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,  பாக்கியலட்சுமி தொடரில் வரும் கதாபாத்திரங்களை வைத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி காட்சி ஒன்று, தற்போது பாக்கியலட்சுமி ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

கோபியாக மாறிய ராஜவேலு

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி, பல சீசன்கள் தாண்டி, விஜய் டிவியில் வெற்றிகரமாக வலம் வந்தது. அந்த வகையில், இந்த நிகழ்ச்சியில் வந்த போட்டியாளர்களை வைத்து, KPY சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சியும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதன் மூன்றாம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் ஒரு அணி தான் சதிஷ் மற்றும் ராஜவேலு ஆகியோர். இவர்கள் அப்படியே, பாக்கியலட்சுமி தொடரை எடுத்து, அதில் வரும் கதாபாத்திரங்களை வைத்து, மிகவும் ஜாலியாக ஒரு காட்சியை உருவாக்கினர். அதிலும் குறிப்பாக, கோபி கதாபாத்திரத்தில் வந்த ராஜவேலு, ஒட்டுமொத்த அப்ளாஸையும் அள்ளி இருந்தார்.

ஒரு பக்கம், பாக்கியலட்சுமி தொடர் மிகவும் சீரியஸாக போய் கொண்டிருக்க, மறுப்பக்கம் விஜய் டிவியின் மற்றொரு நிகழ்ச்சியான KPY சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில், அதே தொடரை காமெடியாக செய்து, பாக்கியலட்சுமி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கவும் வைத்துள்ளது, சதிஷ் - ராஜவேலு காம்போ.

தொடர்புடைய இணைப்புகள்

KPY new episode about baakiyalakshmi serial spoof

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi Spoof, KPY Champions 3, Rajavelu, Sathish will find this news story useful.