Nenjuku Needhi

"சில்வண்டு சிக்குனாலும் இவரு சிக்க மாட்டாரோ" உச்சகட்ட குஷி'ல Gopi.. எப்டி எல்லாம் தப்பிக்குறாரு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாக்கியலட்சுமி  தொடரில் அடுத்தடுத்த எபிசோடுகள் ஒவ்வொன்றும் மிக மிக விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டே இருக்கிறது.

Baakiyalakshmi gopi escaped from radhika in birthday party

Also Read | கமல் நடிக்கும் விக்ரம்.. படத்தின் தெலுங்கு Title இதானா? வெளியான மிரட்டலான டிரெய்லர்.!

இந்த தொடரில், தற்போது பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்களின் மஹா சங்கமம் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஆட்டம் பாட்டம் என கோபி இருக்கும் காட்சி ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

அடுத்தடுத்து திருப்பங்கள்..

கடந்த பல வாரங்களாகவே, பாக்கியலட்சுமியின் ஒவ்வொரு காட்சிகளும் உச்சகட்ட  விறுவிறுப்புடன் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. மனைவி பாக்கியாவை ஏமாற்றி விட்டு, ராதிகாவை திருமணம் செய்யும் முடிவை என்றோ எடுத்து விட்டார் கோபி. ஆனால், அடுத்தடுத்து நிறைய திருப்பங்கள் நிகழ, அதற்கான நேரமும் தள்ளி தள்ளி போகிறது.

உருவான சிக்கல்

மேலும், கோபியின் நாடகமும் நெருங்கிய தோழிகளான பாக்கியா மற்றும் ராதிகா ஆகியோருக்கு தெரியாது. இதற்கு மத்தியில், தன்னுடைய அசாத்திய நடிப்பால், இருவரையும் ஏமாற்றி வருகிறார் கோபி. நடுவே, பல நேரங்களில் கோபி சிக்கிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகிய போதும், எப்படியோ தனது தந்திரத்தால் அவர் தப்பித்துக் கொண்டே இருக்கிறார். இப்படி ஏராளமான பிரச்சனைகளை தாண்டிக் கொண்டே இருக்கும் கோபிக்கு, மஹா சங்கமத்திற்கு மத்தியில் ஒரு பெரிய சிக்கல் உருவானது.

Baakiyalakshmi gopi escaped from radhika in birthday party

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூர்த்தி மற்றும் அவரது மனைவிக்கு ராதிகாவை தான் கோபி அடுத்து திருமணம் செய்ய போகிறார் என்பது பற்றி தெரிந்து விடுகிறது. இதன் பெயரில், கோபியிடம் வாக்குவாதத்தில் இடம்பெறுகிறார் மூர்த்தி. இது தொடர்பான ப்ரோமோக்கள், அதிகமாக வைரலாகி இருந்தது.

என்னா ஆக்டிங்'யா..

இது ஒரு புறம் இருக்க, தற்போது கோபி அடிக்கும் லூட்டி தொடர்பான காட்சிகளும், பாக்கியலட்சுமி தொடரின் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்று வருகிறது. தன்னுடைய தோழியான ராதிகாவை, கோபியின் தந்தையின் 75 ஆவது பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கிறார் பாக்கியா. இதனை ஏற்று, மயூராவுடன் ராதிகாவும் வருகை தர, என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார் கோபி.

Baakiyalakshmi gopi escaped from radhika in birthday party

இதற்கு மத்தியில், தன்னுடைய அறைக்குள் உட்கார்ந்து கொண்டு, ஆபிஸ் வேலை இருப்பது போல கோபி நடிக்க, அவ்வபோது பலரும் வந்து கதவைத் தட்டி, கீழே வரும் படி அறிவுறுத்துகின்றனர். ஆனால், அறைக்குள் இருந்து கொண்டே சமாளித்து விடுகிறார் கோபி. கடைசியில் பிறந்த நாள் வீட்டுக்கு வந்த ராதிகா மற்றும் மயூரா ஆகியோர், கோபியைக் காணாமலே கிளம்பி விடுகின்றனர். இதனை மெல்ல பால்கனியில் நின்ற படி, ராதிகா காரில் ஏறி கிளம்புவதை பார்த்த பிறகு தான் நிம்மதி அடைகிறார் கோபி.

Baakiyalakshmi gopi escaped from radhika in birthday party

மறுகணமே அறைக்குள் வந்து, ஆட்டம், பாட்டம் என குதூகூல மோடில் இருக்கிறார் கோபி. இதனைக் காணும் ரசிகர்கள் பலரும், கோபி அடுத்தடுத்து தப்பிப்பது பற்ற கருத்து தெரிவித்து வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi gopi escaped from radhika in birthday party

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Gopi, Vijay Television will find this news story useful.