ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் நடிக்கும் ’சுழல்’… பிரபல ஓடிடி வெளியிட்ட ரிலீஸ் Update

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய வெப் சீரிஸான ‘சுழல்’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Aishwarya Rajesh Kathir SUZHAL web series release date prime video

Also Read | “இனிமே Title-அ ‘கருப்பு கமல்ஹாசன்’னு போடணும்…” ’விக்ரம்’ எப்படி இருக்கு? கூல் சுரேஷின் Viral video

ஐஸ்வர்யா ராஜேஷ்…

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்க முட்டை, வடசென்னை, அட்டகத்தி ஆகிய படங்களில் அவரின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது. தமிழ் சினிமாவில் நயன்தாரா, திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார். தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அண்மையில் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம் மற்றும் திட்டம் இரண்டு ஆகியவை முக்கியமான படங்களாக அமைந்தன. சமீபத்தில் அவர் நடித்த கனா திரைப்படம் சீனாவில் வெளியாகி சாதனை படைத்தது.

Aishwarya Rajesh Kathir SUZHAL web series release date prime video

கதிர்…

தமிழ் சினிமாவில் அறிமுகமானதில் இருந்து குறைந்த அளவிலேயே படங்களில் நடித்திருந்தாலும், கதிர் தரமானக் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். பரியேறும் பெருமாள், மதயானைக் கூட்டம், மற்றும் கிருமி போன்ற படங்கள் அவருக்கு நல்லப் பெயரைப் பெற்றுத்தந்தன. அதையடுத்து இப்போது அவர் பார்த்திப்ன மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷோடு இணைந்து புதிய வெப் சீரிஸில் அறிமுகமாகிறார்.

சுழல்…

விக்ரம் வேதா பட புகழ் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி தம்பதியினர் கதை எழுத, இந்த புதிய வெப் சீரிஸை குற்றம் கடிதல் இயக்குனர் பிரம்மாவும், கிருமி இயக்குனர் அணுசரனும் இயக்குகின்றனர். அமேசான் ப்ரைம் வெளியீடாக வர உள்ள இந்த சீரிஸூக்கு ‘சுழல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், பார்த்திபன் மற்றும் ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். த்ரில்லர் வகையில் உருவாக்கப்படும் இந்த சீரிஸின் முதல் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்த சீரிஸ் பற்றி தெரிவித்துள்ள ப்ரைம் வீடியோ “ஒரு சிறிய நகரத்தில் காணாமல் போகும் நபர்களை பற்றிய தேடுதலில் வெளிவரும் பயங்கரமான உண்மைகள் பற்றிய கதை” எனக் கூறியிருந்தனர்.

Aishwarya Rajesh Kathir SUZHAL web series release date prime video

ரிலீஸ்…

இந்நிலையில் தற்போது இந்த சீரிஸின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 17 ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இதுபற்றிய அறிவிப்பை புதிய மோஷன் போஸ்டரோடு அமேசான் ப்ரைம் அறிவித்துள்ளது.

 

Also Read | “அந்த feeling-அ எப்படி சொல்றது… ரொம்ப மிஸ் பண்றேன்”… இந்த வாரம் விஜய் அம்மா சொன்ன குட்டி Story

 

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajesh Kathir SUZHAL web series release date prime video

People looking for online information on Aishwarya Rajesh, Kathir, Suzhal Movie, SUZHAL web series release updates, Web Series will find this news story useful.