‘பொளந்து கட்டிய பாரிஸ்டோவ்–வார்னர் கூட்டணி’..‘சதம் அடித்து விளாசல்.. மிரண்டு போன பெங்களூரு பௌலர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 31, 2019 06:16 PM

ஹைதராபாத் அணி வார்னர் மற்றும் ஜானி பாரிஸ்டோவின் அதிரடியால் பெங்களூரு அணிக்கு இமால இலக்கை வைத்துள்ளது.

IPL 2019: Bairstow, Warner centuries power SRH to 231

ஐபிஎல் டி20 தொடரின் 11 -வது லீக் போட்டி இன்று(31.03.2019) ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சன்ரைசர்சஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னரும், ஜானி பாரிஸ்டோவ் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இவர்களது கூட்டணி பெங்களூரு பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிக்ஸர்களால் சிதறடித்தது. இதில் ஜானி பாரிஸ்டோவ் 56 பந்துகளில் 114  ரன்களும், வார்னர் 55 பந்துகளில் 100 ரன்களும் எடுத்து அசத்தினர். 20 ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன்களை ஹைதராபாத் அணி எடுத்தது.

232 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #SRHVRCB #VIVOIPL #WARNER #BAIRSTOW #ORANGEARMY