"மக்களோட தீர்ப்பை ஏத்துக்குறேன்.." தேர்தல் முடிவுகளுக்கு மத்தியல்.. டிடிவி 'தினகரன்' செய்த 'ட்வீட்'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில், ஸ்டாலின் தலைமையிலான திமுக சுமார் 160 தொகுதிகள் வரை முன்னிலையில் இருக்கிறது.

இதனால், தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளது, உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, ஸ்டாலினுக்கு பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, டிடிவி தினகரனின் அமமுக கட்சி, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
அதிலும், தினகரன் போட்டியிட்ட கோவில்பட்டி தொகுதியில், அவர் தோல்வியைத் தழுவியுள்ளார். அதிமுக சார்பில் களமிறங்கிய கடம்பூர் ராஜு, கோவில்பட்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அமமுக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத நிலையில், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். தேர்தலில் களப்பணி ஆற்றிய கழக உடன்பிறப்புகளுக்கும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 2, 2021
'மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். தேர்தலில் களப்பணி ஆற்றிய கழக உடன்பிறப்புகளுக்கும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
