என்னுடைய அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள்...! 'எல்லா மக்களும் திருப்தி அடையுற மாதிரி ஒரு ஆட்சியை கொடுக்கணும்...' - ரஜினிகாந்த் வாழ்த்து...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
![Rajinikanth congratulated mk Stalin on the telephone Rajinikanth congratulated mk Stalin on the telephone](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/rajinikanth-congratulated-mk-stalin-on-the-telephone.jpg)
தற்போதைய நிலவரப்படி திமுகவில் 49 வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 110 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில் 159 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால், திமுக ஆட்சி அமைக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களமிறங்கி மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குவார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கட்சி ஆரம்பிக்கும் முடிவை கைவிட்டார்.
தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் கடும் போட்டியில்,திறம்பட அயராது உழைத்து வெற்றி அடைந்திருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய முக.ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் ரஜினிகாந்த தெரிவித்துள்ளார்.
Superstar @rajinikanth wishes @mkstalin @arivalayam for the Massive Success@Udhaystalin @Anbil_Mahesh #TNElections2021 #TNElectionResults2021 #NikilMurukan #NM#NMNews23 pic.twitter.com/8h3tJVjYFy
— Nikil Murukan (@onlynikil) May 2, 2021
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)