40-லும் தனியே தன்னந்தனியே.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அமமுக!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Mar 17, 2019 02:28 PM
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டு விபரத்தையும், எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்கிற விபரங்களையும் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரனும், தங்கள் கட்சிக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து வெளியிட்டுள்ளார்.
முன்னதாக 40 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த டிடிவி தினகரன், முதற் கட்டமாக அவற்றுள் 24 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சட்டமன்ற இடைத் தேர்தலில் 9 தொகுதிகளில் நிற்கவுள்ள வேட்பாளர் பட்டியலையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட சில எம்.எல்.ஏக்களும் இந்த இடைத் தேர்தலில், அமமுக வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதுபற்றி பேசிய டிடிவி தினகரன், மார்ச் 22-ஆம் தேதி அமமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவுள்ள அமமுக-வின், 24 தொகுதிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!#TTVDinakaran of #AMMK releases its 1st set of candidates list for upcoming #LokSabhaElections2019 and tamilnadu assembly by elections! pic.twitter.com/OPKB2MTx8H
— Behindwoods (@behindwoods) March 17, 2019
