ட்விட்டரின் 'டார்க் மோட் லைட்ஸ் அவுட்' ஆப்ஷன்... புதிய அறிமுகம் இந்த போனுக்கு மட்டும்தானா?..

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Sangeetha | Mar 29, 2019 04:05 PM

பேட்டரி சார்ஜை நீடிக்கும் விதமாகவும், கண்ணுக்கு இதமாகவும் இருக்கும் வகையில் ட்விட்டரில் 'டார்க் மோட் லைட்ஸ் அவுட் ஆப்ஷன்' முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

twitter adds dark mode lights out option for iphone

உலக அளவில் பேஸ் புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் முதலிய சமூக வலைத்தளங்களை நடிகர், நடிகைகள் துவங்கி பிரதமர், அரசியல் தலைவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். இந்த சமூக வலைத்தளங்களுக்கு அதிகளவில் பயன்பாட்டாளர்களும் உள்ளனர்.  அந்த வகையில் ட்விட்டர் என்பது முக்கியமான சமூக வலைத்தளமாக இருந்து வருகிறது. மக்கள் தங்களது எண்ணங்களை பதிவிட ட்விட்டர் சமூக வலைத்தளம் சிறந்த களமாக உள்ளது.

ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் தங்களது தேவைகளை அவ்வப்போது ட்விட்டர் நிர்வாகத்திடம் கோரிக்கையாக முன்வைப்பதுண்டு. அதன்படி பேட்டரி சார்ஜை நீடிக்கும் வைக்கும் விதமாக 'டார்க் மோட் ஆப்ஷன்' வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. ட்விட்டரில் ஏற்கனவே 'நைட் மோட் ஆப்ஷன்' உள்ளது. தற்போது 'டார்க் மோட் ஆப்ஷன்' கொண்டுவரப்பட்டு, அதனுடன் 'லைட் அவுட் ஆப்ஷனும்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஆப்பிள் ஐபோன் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் மட்டும் வேலை செய்யும் விதத்தில் 'டார்க் மோட் லைட் அவுட்ஸ்' வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் வெப்வெர்ஷனில் விரைவில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 'டார்க் மோட் லைட்ஸ் அவுட்' அம்சம் நீலம் மற்றும் கிரே வண்ணத்தில் கண்களுக்கு அழுத்தம் தராத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

செட்டிங்ஸ் மற்றும் டிஸ்பிளே பகுதிக்கு சென்று, டிஸ்பிளே மற்றும் சவுண்டு உள்ள மெனுவில் உள்ள 'டார்க் மோட்டை' ஆக்டிவேட் செய்யலாம். அதன் கீழே உள்ள 'லைட்ஸ் அவுட் ஆப்ஷனையும்' சேர்த்து கிளிக் செய்தால் கண்ணுக்கு இதமான, பேட்டரி சார்ஜ் நிற்கும் வகையில் ட்விட்டரை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Tags : #TWITTER #APPLE #TECHNOLOGY #DISPLAY #DARKMODE #SETTINGS