'நாங்க போட்டியிட்டா அதிமுகவுக்கு வாக்குகள் பிரியும்'...நிபந்தனையற்ற ஆதரவு...ஜெ.தீபா அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | Mar 22, 2019 10:25 PM

மக்களவை தேர்தலில் அதிமுக.,வுக்கு ஆதரவாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை செயல்படும் என அதன் தலைவர் ஜெ தீபா தெரிவித்துள்ளார்.

J Deepa joined in aiadmk party for the upcoming loksabha election

அதிமுக நிர்வாகிகள் எங்களது ஆதரவை ஏற்றுக் கொண்ட பின்னரே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதிமுக தலைமை அழைப்பு விடுத்தால் அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும்,இத்தேர்தலில் நாங்கள் போட்டியிட்டால் அதிமுக மட்டுமல்லாமல் அதன் கூட்டணி கட்சிகளின் ஓட்டு விகிதம் குறையும் எனவே அதிமுக நலன் கருதியும், அதன் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு நாங்கள் தனியாக போட்டியிடுவதை தவிர்த்துள்ளோம் என்று ஜெ.தீபா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.