'கமல் போட்டியிடுகிறாரா'?...பல்லாக்கில் ஏறி இருக்குறத விட...அதை சுமக்க தான் எனக்கு புடிக்கும்!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 25, 2019 09:52 AM
மக்கள் நீதி மய்த்தின் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில்,அதில் கமல் பெயர் இடம்பெறாத காரணத்தால் அவர் மக்களவை தேர்தலில் போட்டியிடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் கமல் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,நேற்று மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் கட்ட வேட்பாளர்களை கோவையில் அறிவித்தார்.அதில் கமலின் பெயர் இடம்பெறவில்லை.மேலும் சிவகங்கை தொகுதியில் சிநேகன் போட்டியிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
பல்லக்கில் ஏறி அமருவதை விட, இவர்களுக்காக ஊர் ஊராக பல்லக்கை சுமப்பதில் தான் எனக்கு பெருமையும் சந்தோஷமும் என தெரிவித்துள்ளார்.இதனிடையே அறிவிக்கப்பட்ட இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் சாத்தூர் தொகுதியில் சுந்தர்ராஜ், விளாத்திகுளம் தொகுதியில் நட்ராஜ் ,தஞ்சாவூர் தொகுதியில் துரைஅரசன், ஆண்டிப்பட்டி தொகுதியில் தங்கவேல் போட்டியிடுகின்றனர்.
திருவாரூர் - அருண் சிதம்பரம், மானாமதுரை - ராமகிருஷ்ணன், பெரியகுளம் - பிரபு
பாப்பிரெட்டிபட்டி - நல்லதம்பி, அரூர்- குப்புசாமி, நிலக்கோட்டை - டாக்டர் சின்னதுரை, பூந்தமல்லி - பூவை ஜெகதீஷ், பெரம்பூர் - பிரியதர்ஷினி, ஓசூர் - ஜெயபால், ஆம்பூர் - நந்தகோபால், கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்ய துணைத் தலைவர் மகேந்திரன், திருப்பூர் - வி.எஸ்.சந்திரகுமார், பொள்ளாச்சி - மூகாம்பிகை ரத்னம் கடலூர் - வி.அண்ணாமலை, விருதுநகர் - வி.முனியசாமி, தென்காசி - முனீஸ்வரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே தமிழக இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் வளரும் தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வளரும் தமிழகம் சார்பில் சோளிங்கர் - மலைராஜன், குடியாத்தம் - வெங்கடேசன், திருப்போரூர் - கருணாகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.