'இந்தியாவிலேயே'!...'ஏன் அப்படி முதல்வர் சொன்னார்'?...பிரச்சாரத்தில் குஷியான அன்புமணி!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 23, 2019 03:56 PM

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகளில் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியும் ஒன்று.அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில்,அன்புமணியை ஆதரித்து முதல்வர் பழனிசாமி  திறந்த வேனில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அன்புமணியும் உடன் இருந்தார்.

CM Edappadi Palanisamy election campaign for anbumani

அப்போது பேசிய முதல்வர் ''இந்தியா போன்ற  ஜனநாயக நாட்டில் வலிமைமிக்க, திறமைமிக்க, வீரமிக்கவர்  தான்  நமது நாட்டிற்கு பிரதமராக வர வேண்டும். கடந்த காலத்தை நாம் திரும்பி பார்க்க வேண்டும். தி.மு.க மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தார்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது தமிழகத்துக்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.தற்போது போட்டியிடுகின்ற கூட்டணி தான் வெற்றி கூட்டணி.இந்த கூட்டணி வெற்றி பெற்றால் தான் தமிழகத்துக்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும். நிதிகள் கிடைக்கும்.அப்போது தான் தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும்.

அன்புமணி ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்த அனுபவம் உள்ளவர்.எனவே அவரை நீங்கள் வெற்றி அடைய செய்ய வேண்டும்.அதுமட்டுமல்லாமல் ''தர்மபுரி தொகுதி இந்தியாவிலேயே அதிகம் வெற்றி பெற்ற தொகுதியாக இருக்க வேண்டும்'' அப்போது தான் இந்த தொகுதி வளர்ச்சி அடையும் என பேசினார்.