கொடநாடு வழக்கில் முதல்வரை சம்மந்தப்படுத்தி திட்டம்.. சாணக்யா சேனல் வெளியிட்ட வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Mar 24, 2019 12:56 PM
தந்தி டிவியின் தலைமை செய்தியாளராக இருந்த ரங்கராஜ் பாண்டே, தனியாக சாணக்யா எனும் பல்நோக்கு சேனலை வலைக்காட்சி சேனலாக தற்போது உருவாக்கியுள்ளார். இந்த சேனலில் ஒளிபரப்பாகியுள்ள கொடநாடு கொலை வழக்கு சம்மந்தமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜை பிரதீப் என்பவர் சந்தித்துள்ளதாகவும், அவர் ‘முதலமைச்சர் எடப்பாடி பெயரை இழுத்துவிட்டால்தான் நீங்கள் தப்பிக்க முடியும்’ என்றும் ‘நாங்கள் சொல்கிறபடி சொன்னால், டில்லியில் இருக்கும் பத்திரிக்கையாளர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்’ என்றும் சொல்லிக் கொடுக்கும் அந்த அதிர்ச்சி வீடியோவினை செய்தியாளர் ரங்கராஜ் பாண்டேவின் புதிய சேனலான சாணக்யா சேனல் தம் வலைக்காட்சி பக்கத்தில் வீடியோவாகவும் பதிவாகவும் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் நடந்த சம்பவத்துக்கு பிறகுதான், சாம் மாத்யூவின் வீடியோ வெளியே வருவதாகவும் சாணக்யா சேனல் குறிப்பிட்டுள்ளது. மேலும் ‘அப்படியானால்...?’ என்கிற கேள்வியினை எழுப்பியுள்ள சாணக்யா சேனல், ‘மேற்படி விவரங்கள் அடுத்த வீடியோவில்’ என்கிற கேப்ஷன்களோடு முடித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் பரபரப்பை கிளப்பிய மேத்யூவின் ஆவணப்படத்தைத் தொடர்ந்து, அதன் பின்னணியில் இருக்கும் அதிர்வுகள் நிறைந்த சம்பவங்களாக சாணக்யா சேனலின் இந்த புதிய வீடியோ இருப்பது இன்னும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோவினாலும், மேலும் அடுத்து வெளியாகவுள்ளதாக சாணக்யா சேனலால் குறிப்பிடப்பட்டுள்ள வீடியோக்களாலும் பெரும் பரபரப்பான அரசியல் திருப்பங்கள் உண்டாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோவில் உள்ள உரையாடல் பதிவு:
நபர்கள்: பிரதீப், சையன், மனோஜ்
முக்கியமான இடத்தில் இருந்து..
பிரதீப்: பைஜூ பாய் அணைத்தையும் சொன்னார் நாம் என்ன செய்யவேண்டும்? என்ன சொல்ல வேண்டும்? அவர் எதாவது செய்ய வாய்ப்பிருக்கிறதா? இதை ஓபிஎஸ் செய்ய வாய்ப்பிருக்கிறதா.?
சையன்: இல்லை.. அவர் வந்து எதிர் முகாம்ல இருந்தார்.
பிரதீப்: அப்போ, நாம எப்படி அவரை இதுக்குள்ள கொண்டு வருவது?
சையன்: நம்ம வந்து மேல எதாவது விசாரணை பண்ணனும்.
மனோஜ்: ஆமா, நாம கூட இதை விசாரிக்கணும்.
பிரதீப்: எனக்கொரு யோசனை இதுல ஏன் (எடப்பாடி) பழனிசாமியை சம்மந்தப்படுத்தக் கூடாது?
சையன்: அப்புறம்? அது எப்படி சாத்தியமாகும்? அதை நாம் எப்படி செய்ய முடியும்?
பிரதீப்: அதற்கான சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தருகிறோம். நீங்க என்ன செய்யக் கூடாது என்றால், நீங்கள் சொல்வதில் இருந்து பின்வாங்கக் கூடாது. எந்த ஒரு சூழ்நிலையிலும் இவர்கள்தான் இப்படி பேசச் சொன்னார்கள் என்று சொல்லக் கூடாது.
சையன்: நாங்கள் அப்படியெல்லாம் செய்ய மாட்டோம். எங்களை எடப்பாடியுடன் நேரடியாக தொடர்பு படுத்த போறிங்களா?
பிரதீப்: அப்படி இல்லை.. இதில் நீங்கள் எடப்பாடியை தொடர்புப்படுத்தி பேச வேண்டும். நாங்கள் இதை எடப்பாடி கிட்ட கொண்டு போவோம்.
மனோஜ்: நாங்க எடப்பாடி கிட்ட பேசனுமா?
பிரதீப்: இல்லை.. இல்லை அதை நாங்க பாத்துப்போம்.
மனோஜ்: உங்களுக்கு இதை செய்தால் எங்களுக்கு என்ன தருவீங்க?
பிரதீப்: நாங்களும் அதைத்தான் யோசிச்சிட்டு இருக்கோம். இப்படி செய்யாமல் போனால் நீங்க மாட்டுவீங்க..
சையன்: அப்படின்னா நேரடியா நம்மள கஸ்டடியில எடுத்துடுவாங்க.
பிரதீப்: ஆமா மொத்த டிபார்ட்மெண்டே அவர்கள் கைகளில்தானே இருக்கு. அவரை மாட்டவைக்க வழிகள் உருவாக்கிட்டு நாங்க அவர் கிட்ட போவோம்.அப்போதான் உங்கள இந்த வழக்கிலிருந்து விடுவிக்க முடியும். அதுதான் எங்க விருப்பமும். இது ஒரு ஆபத்தான கேம்தான். அதுக்கு நீங்க தயார் தானே?
சையன்: நாங்க ஏற்கனவே அதுல நாங்க மாட்டிக்கிட்டுதானே இருக்கோம்.
பிரதீப்: அப்படியான ஆபத்தில்தான் நம்ம ரிஸ்க் எடுக்க வேண்டி இருக்கு. ஆபத்து இருக்குறதால நம்ம தலையை கொடுக்கணும்னு அவசியம் இல்ல.
சையன்: எங்களுக்கு பரவாயில்லை. நாங்க ஏற்கனவே இதுல மாட்டிக்கொண்டோம். நீங்களும் இதில் மாட்டிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.. இது தவிர வேற வழியே இல்லையா? நாம் விசாரனை நடத்த கோரிக்கை வைக்க முடியாதா?
பிரதீப்: அது நடக்காது. வேற வழியே இல்லை. உச்ச நீதிமன்றத்துக்கு சென்றால் கூட நீங்க வெளியே வர முடியாது.
சையன்: நாம் உத்தரவு பெற்றாலும் நடக்காது இல்ல?
பிரதீப்: உத்தரவு கிடைத்தாலும் அவர்கள் தங்களின் ஆட்களையே விசாரிக்க பயன்படுத்துவார்கள். அப்போ என்ன பண்ணுவீங்க? இது எவ்வளவு பெரிய விஷயம்? அதிகாரம் அவர்களிடத்தில் இருக்கு. இது கேரளாவா இருந்தா கூட சமாளிச்சக்கலாம், தமிழ்நாடாக இருப்பதால்தான் பிரச்சனை.
சையன்: கேரளான்னா நீதி கிடைக்கும். தமிழ்நாடு என்றாலே ரவுடியிசம்தான். தனக்கு எதிரானதென்றாலே ரவுடியிசத்த தொடங்கிவாங்க.
பிரதீப்: ஆனால் அங்கு ரவுடிகளை விட போலீஸ் மோசமானவர்கள். நாங்க சரியா திட்டமிடுறோம். டெல்லியில் இருந்து செயல்படுவோம். டெல்லியில் உள்ள செல்வாக்கான பிரபலமான பத்திரிகையாளர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். அவருடைய கண்காணிப்பில், அறிவுரையின்படி, இதை முன்னெடுத்துச் செல்வோம். அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.
சையன்: இதை தேசிய நாளிதழில் செய்தியாக வெளியிடுவாரா?
பிரதீப்: நாளிதழில் செய்தி வந்து எந்த பயனும் இல்லை. அப்படி செய்திகள் வந்தால் மதிப்பு போய்விடும். பழனிசாமிக்கு எதிராக நீங்கள் ஒரு பேட்டி கொடுக்க வேண்டும். நான் சொல்வது போல...