''செய்வீர்களா''....’திரையில் புரட்சித் தலைவி ஆகும் பிரபல நடிகை'...'சஸ்பென்ஸை உடைத்த இயக்குநர்!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 23, 2019 10:46 AM

சினிமா நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை கதைகள் படமாக்கப்படும் போது அது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறுகிறது.அந்த வரிசையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாகிறது.

Kangana Ranaut will be playing Jayalalithaa in a biopic Thalaivi

இயக்குனர் விஜய் இயக்கும் இந்த படத்திற்கு தலைவி என பெயரிடப்பட்டுள்ளது.இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனவ்த் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது.இவர் தமிழில் ஏற்கனவே, ஜெயம் ரவி ஜோடியாக ’தாம்தூம்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் கதையை ’பாகுபலி’ கதாசிரியரும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் அப்பாவுமான விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் விஜய் ''மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட தலைவரின் வாழ்க்கையினை படமாக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.மிகுந்த பொறுப்புடன் அந்த பணியினை செய்ய வேண்டும்.இது எனக்கு மிகப்பெரிய கெளரவம் ஆகும்.இந்த படம் நிச்சயம் அவருக்கு அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமையும்.அதோடு ஜெயலலிதாவாக, கங்கனா ரனவ்த் நடிப்பது பெருமையான விஷயம்'' என கூறினார்.

Tags : #JJAYALALITHAA #AIADMK #KANGANA RANAUT #AL VIJAY #THALAIVI