எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த கூட்டணி கட்சிகளுக்கு? அரசியல் பரபரப்பை தொடங்கிய அதிமுக அறிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Mar 17, 2019 11:29 AM
மக்களவை தேர்தலில் தென் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் , நாமக்கல் , ஈரோடு, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, கரூர், பெரம்பலூர், சிதம்பரம், நாகை, மயிலாடுதுறை, மதுரை , தேனி, நெல்லை, ஆரணி ஆகிய தொகுதிகளில் அஇஅதிமுக போட்டியிடுகிறது.

மேலும் அதிமுகவுடனான கூட்டணியில் பாமகதருமபுரி, விழுப்புரம்(தனி), அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கன்னியாகுமரி, சிவகங்கை, கோயமுத்தூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 5 தொகுதிகளில் அதிமுகவின் கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தைப் பொருத்தவரை அதிமுகவின் கூட்டணியில் கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சென்னை வடக்கு, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தவிர இன்னும் பிற கட்சிகளான தமிழ் மாநில காங்கிரஸ் தஞ்சாவூரிலும், புதிய தமிழகம் கட்சி தென்காசியிலும், புதிய நீதிக் கட்சி வேலூரிலும், அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி புதுச்சேரியிலும் அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடுகின்றன.
இவற்றுள் தென் சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், பொள்ளாச்சி, நீலகிரி, பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகமும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் நேரடியாக மோதிக்கொள்கின்றன.
தமிழ்நாட்டின் இருபெரும் பலம் பொருந்திய கட்சிகளாக பார்க்கப்படும் இந்த 2 கட்சிகளுக்கிடையேயான மோதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் இந்த தொகுதிகளில் மேலும் பரபரப்பு உச்சத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மத்திய சென்னை, தருமபுரி, கடலூர், திண்டுக்கல், அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் உதயசூரியனுடன் நேரடியாக பாமக மோதுகிறது. தூத்துக்குடியில் உதயசூரியனுடன் , அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக நேரடியாக மோதுகிறது.
எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த கூட்டணி கட்சிகளுக்கு? அரசியல் பரபரப்பை தொடக்கிய #அதிமுக-வின் அறிக்கை! #LokSabhaElections2019 #ADMK #ADMKalliance #Elections2019 #ElectionsWithBW pic.twitter.com/8O5RctdaqM
— Behindwoods (@behindwoods) March 17, 2019
