திமுகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்திய விசிக: எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Mar 04, 2019 12:42 PM
நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் திமுகவுடன், திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி வைத்துள்ளதோடு, விசிகவுக்கான தொகுதிப் பங்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள திமுக, காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. அதன் பிறகு மு.க.ஸ்டாலின் விஜயகாந்தினை சென்று சந்தித்தார். தொடர்ந்து திமுகவுடன் பல்வேறு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான திருமாவளவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இருவரும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சிக் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடுகள் பற்றிய பேச்சுவர்த்தையினை நடத்தினர். அதில் ஒரு சுமுகமான உடன்படிக்கை ஏற்பட்ட பின்பு, திமுக- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டணி உறுதியானதோடு, விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக திமுக கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, முஸ்லீம் லீக் கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டும் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடான தொகுதி பங்கீடு மிக விரைவில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் இந்த திமுக-விசிக கூட்டணி முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தொகுதி மற்றும் சின்னங்கள் உள்ளிட்ட இன்ன பிற விபரங்களை இன்னும் இரு தினங்களில் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
