'மோடி விழாவில் அவமானப்படுத்தப்பட்டாரா'?...வலுக்கட்டாயமாக கீழே இறக்கப்படும்...பரபரப்பு வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 02, 2019 04:32 PM

பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைக்க, நேற்று கன்னியாகுமரி வந்தார் பிரதமர் மோடி. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் ரூபாய் 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் குறித்து,அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு விளக்கம் அளித்து கொண்டிருந்தார்கள்.

Thalavai Sundaram Evicted From Stage shared by Modi function

இந்த விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரமும் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். பிரதமருக்கு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு இருப்பதால் மோடி பங்கேற்கும் விழா மற்றும் எந்த ஆய்வு கூட்டமாக இருந்தாலும் யார் யார் உடனிருக்க வேண்டும் என்பதனை பாதுகாப்பு அதிகாரிகள் தான் தீர்மானிப்பார்கள்.

இதனிடையே அதிகாரிகள் செயல்படுத்த பட இருக்கும் திட்டங்கள் குறித்து மோடிக்கு விளக்கமளித்து கொண்டிருந்தார்கள்.அப்போது அந்த பகுதிக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் வந்தார்.அப்போது அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரி தளவாய் சுந்தரத்திடம் அங்கு நிற்க வேண்டாம் என கூறியிருக்கிறார்.ஆனால் அவர் மறுக்கவே அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டனர்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.