'மறுபிறவி எடுத்து...காதலியை கரம்பிடித்த பிரபல கிரிக்கெட் வீரர்'...உணர்வுப்பூர்வமான சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 23, 2019 11:40 AM

நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருந்து உயிர் தப்பிய பங்களாதேஷ் வீரர் மெஹிடி ஹாசன் தனது காதலி  ரமேயா அக்தர் பிரித்தியை கரம் பிடித்துள்ளார்.இது மிகவும் உணர்வு பூர்வமான நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.

Mehidy Hasan marries his fiancee on Friday in Khulna

கடந்த சில தினங்களுக்கு முன்பு நியூசிலாந்து நாட்டின்கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 8 இந்தியர்கள் உள்பட 50 பேர் பலியாகினர். அமைதிப் பிரதேசமாக விளங்கும் நியூசிலாந்து நாட்டு மக்களை இந்த தாக்குதல் நிலைகுலைய வைத்தது.

இந்த கோரமான தாக்குதலில் பங்களாதேஷ் வீரர்கள் நூலிழையில் உயிர் தப்பினார்கள்.இந்த சம்பவத்தில் உயிர் தப்பிய வீரர்களில் ஒருவர் தான் மெஹிடி ஹாசன்.இவர் ஆல்ரவுண்டராகவும் அசத்தி வருகிறார்.இந்நிலையில் மெஹிடி ஹாசன் தனது நீண்ட நாள் காதலி, ரமேயா அக்தர் பிரித்தியை வியாழக்கிழமை திருமணம் செய்துகொண்டார்.பங்களாதேஷின் தென்மேற்கு பகுதியான குல்னாவில் இந்த திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

இது மிகவும் உணர்வுப்பூர்வமான நிகழ்வு.துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags : #CRICKET #MEHEDI HASAN #NEW ZEALAND