கண்டிப்பா ஒரு நாள்...'நான் கோலி போல ஆயிடுவேன்...ஆயிடுவேன்...ஆயிடுவேன்'...வீரரின் சபதம்!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 19, 2019 03:18 PM

இந்திய கேப்டன் விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் என்பது அசாத்தியமானது.உலக அளவில் யாரும் குறை கூறாத பேட்ஸ்மேனாக கோலி திகழ்கிறார்.இந்த நிலையில் 'ஒரு நாள் நான் நிச்சயமாக கோலி போன்று வீரனாக மாறுவேன் என  இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

I have the Confident to reach Virat Kohli\'s Level says Jos Buttler

டெய்லிமெயில் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில் ''கோலியை போன்று மாறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.அவர் எல்லா போட்டிகளிலும் சதம் அடிக்கிறார்.அது சாதாரண காரியம் அல்ல.அதற்காக அவர் கடுமையாக உழைக்கிறார்.நானும் நிச்சயமாக தன்னம்பிக்கையுடன் உழைத்து அந்த இடத்தினை அடைவேன்'என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

கோலி தற்போது வரை  41 சதங்களை விளாசி இருக்கிறார். சராசிரி 60ஐ தாண்டி வைத்துள்ளார். 2017ம் ஆண்டு 26 போட்டிகளில் 1460 ரன்களையும் , 2018ம் ஆண்டு 14 போட்டிகளில் 1202 ரன்களையும் குவித்துள்ளார்.

Tags : #VIRATKOHLI #CRICKET #JOS BUTTLER