'6 வருசத்துக்கு அப்புறம் திரும்பி வர்றேன்'...ஆனால் இணையப்போகும் அணி?...உற்சாகத்தில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 15, 2019 10:30 AM
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும்,ரசிகர்களால் தாதா என அன்போடு அழைக்கப்படும் சவுரவ் கங்குலி, ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.இது ஐபிஎல் ரசிகர்களுக்கு கடும் உற்சாகத்தை அளித்துள்ளது.
ககிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு,ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக 2008 முதல் 2010-ம் ஆண்டு வரை கங்குலி விளையாடினார்.அதன் பின்பு புனே வாரியர்ஸ் அணியில் இடம்பெற்ற நிலையில் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்றார்.இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் பதவியில் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தனது மகிழ்ச்சியினை ட்விட்டரில் பகிர்ந்துள்ள டெல்லி அணி நிர்வாகம் ''எங்களின் வங்கப் புலிக்கு ஹலோ, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஆலோசகர் பொறுப்பை ஏற்கும் கங்குலியை நாங்கள் மனதார வரவேற்கிறோம் என பதிவிட்டுள்ளார்கள்.இது குறித்து கங்குலி கூறுகையில் ''ஜின்டால், ஜேஎஸ்டபிள்யு குழுமத்தோடு எனக்கு நல்ல உறவு இருக்கிறது.அவர்களோடு இணைவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.டெல்லி வீரர்களோடு இணைந்து பணியாற்றுவதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.இந்நிலையில் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராகவும்,கங்குலி ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டிருப்பது அணிக்கு புதிய உற்சாகத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: Tigers, say hello to our Royal Bengal Tiger!
— Delhi Capitals (@DelhiCapitals) March 14, 2019
We're delighted to welcome @SGanguly99 to Delhi Capitals, in the role of an Advisor. #ThisIsNewDelhi #DelhiCapitals pic.twitter.com/TUt0Aom5MR