'ஸ்டெம்ப்க்கு பின்னாடி அவர் இல்ல '...இப்ப வந்து 'கொய்யோ மொய்யோனு அழுது'... என்ன ஆக போகுது!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 14, 2019 09:55 AM

அவரை விமர்சனம் செய்கிறவர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பிதற்றுகிறார்கள் என,தோனி குறித்து விமர்சனம் செய்பவர்களை,ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் கடுமையாக சாடியுள்ளார்.

Dhoni is still adaptable and can bat anywhere India

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திரசிங் தோனி ஃபார்மில் இல்லை என்ற கூற்றுக்கு விமர்சகர்களை கடுமையாக சாடியுள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் ''ஒரு போட்டியின் நிலைமை மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கும் போது தோனி போன்ற மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணிக்கு தேவை.நிச்சயமாக தோனி ஒரு சிறந்த விளையாட்டு வீரர்.அவர் அணியில் இல்லாமல் போனால் நிச்சயம் அது இந்திய அணிக்கு தான் பெரிய இழப்பு.

அதையும் மீறி தோனி குறித்து ஒருவர் விமர்சனம் செய்வார் என்றால் அவருக்கு நிச்சயம் தோனியின் திறன் தெரியாமல் பிதற்றுகிறார் என்றே நான் கூறுவேன் என ஷேன் வார்ன் சாடியுள்ளார்.மேலும் உலகக்கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நிச்சயம் கடுமையான போட்டி நிலவும்.தற்போது எந்த அணி உலககோப்பையினை வெல்லும் என்பதை நிச்சயம் கணிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Tags : #MSDHONI #CRICKET #SHANE WARNE #WORLD CUP 2019