'இருக்கு இந்தியாவுக்கு பெரிய ஆபத்து இருக்கு'...வேர்ல்ட் கப்'புக்கு நாங்க கம்-பேக்...உற்சாகத்தில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 19, 2019 12:24 PM
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டுக்கு முன்னர் ஆஸ்திரேலிய கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு, கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து தடை விதிக்கப்பட்டது.இதனிடையே அவர்கள் இருவரும் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியினை வழி நடத்துவார்கள் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே தனது எதிர்பார்ப்பினை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா விளையாடிய டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் மற்றும் பேட்ஸ்மேன் கேம்ரான் பேங்க்ராஃப்ட் ஆகியோருக்குத் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்காலம் இந்த மாத இறுதியில் முடிவுக்கு வருகிறது.இதனால் இருவரும் வரும் 22 ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடர் மூலம் கிரிக்கெட் களத்துக்குத் திரும்ப உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.அந்த போட்டியில் இருவரும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனையடுத்து ஐபிஎல் மூலம் ஸ்மித் மற்றும் வார்னர் களத்திற்கு திரும்பினால் நன்றாக இருக்கும் என,ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் கருதுகின்றனர். இதைத்தொடர்ந்து ஸ்மித், தனது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனும்,டேவிட் வார்னர், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுனும் தங்களது பயிற்சியினை தொடங்கியுள்ளார்கள்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த,முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே,உலகக்கோப்பை போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் அணியினை வழிநடத்துவார்கள்,என தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.இதனிடையே இரண்டு வீரர்களும் அணிக்கு திரும்புவதால் நிச்சயம் உலகக்கோப்பை போட்டியானது கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதே நேரத்தில் இந்திய அணிக்கு இருவரும் சிம்ம சொப்பனமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
